மாகர் (माघः)
ஸம்ஸ்க்ருத ஸாஹித்யம் என்னும் விரிந்த வானகத்தே சுடர்விட்டு இயங்கும் மகாகவியாகிய மாகரை அறியாதவரும் உளரோ? "माघे सन्ति त्रयोगुणा :" என்பது ஸாஹித்தியச் சான்றோர்கள் சாற்றும் போற்றுரை மாகரிடத்தில் உவமை பொருட்பெருமை விழுமிய சொற்களின் பொலிவு " என்ற மூன்று முக்கிய தன்மைகளும் தக்காங்கு அமைந்துள்ளன காளிதாஸரைப் போல அத்துணை அளவில் அத்துணைச் சிறப்பான உவமைகள் காணப்படாம லிருப்பினும், மாகருடைய காவியத்திலும் போதிய அளவில் சிறந்த உவமைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அவ்வாறே, பொருட்செறிவும் புலப்படுகின்றது. விழுமிய சொற்களைப் பயன்படுத்துங் கெழுதகைமை மாகருக்கே உரியது என்பதிற் சிறிதும் ஐயமில்லை. மாகர் அமைத்துள்ள சொற்களின் வைப்பு - முறையை மாற்றியமைக்க முடியாத அளவிற்கு அவை எழிலும் எற்றமுமுடையவை.
மாகருடைய தந்தையார் " தத்தகர் என்பவர், பெரும் புலவர், சிறந்த கலைவாணர், வரையாது வழங்கும் வள்ளல் பீன- மால்” என்பதொரு கூர்ஜர நகரத்திற் பிறந்தவர் மாகர். ஒருகாலத்தில், அங்ககர், தலை நகராகவும் கல்வி கேள்விகளிற் சிறந்த நகரமாகவும் விளங்கியது. மாகரின் தந்தைக்குத் தந்தையாகிய சுப்ரபதேவர் (सुप्रदेव:) என்பர் குஜராத்தின் ஒரு பகுதியில் அரசு செய்துவந்த ' வர்மலாத் ' என்னும் மன்னனின் முதலமைச்சராக இருந்தார்.
மகாகவி மாகரும், தம் தந்தையைப் போலவே, பரந்த உள்ளம் படைத்தவர் ; தம்மால் வந்தவர்களுக்கு வாரி வழங்கும் சீரிய மனப்பான்மை யுடையவர். மாகர், போஜ மன்னனுடைய நண்பர். மாழைமணிப் பொருள்களை வழங்கி வழங்கி, மாகர் ஏழையான பொழுது, அவரது மனைவி மாகரல் மகாகாவ்யம் சருக்கத்தில் வைகறையை சிசுபால விதத்தில் பதினொராம் விளக்க வரும் कुमुदवनमपश्रि श्रीमदम्भोजपण्डम् '' எனத் தொடங்குஞ் செய்யுளை எடுத்துக் கொண்டு போஜ மன்னனிடஞ் சென்றாள். அச்செய்யுளை செவிமடுத்த மன்னன் மனமுருகி நிறைய பொன்னைக் கொடுத்துதவினான் ஆனால் அந்நங்கை அத்தங்கைப் பொருளை வழியில் வந்த வறிஞர்களுக்கு வாரி வழங்கிவிட்டு வெறுங்கையினளாகவே இல்லந்திரும்பினாள் வரிசையாக கின்று கொண்டிருந்த வறிஞர்களைக் கண்ணுற்ற கவிஞரது உள்ளம் பெரிதும் புண்ணுற்றது. அத்துன்பங் காரணமாக வே மாகர் மண்ணுலக வாழ்வை நீத்தார். அவருடன் தீயிற் புக்கு அவருடைய மனைவியாரும் மாய்ந்துபோனார். மாகரு டைய வாழ்க்கையில் நடந்த இன்னல் தரும் இந்நிகழ்ச்சி யாவரும் உணர்ந்ததே. இதனை எவ்வளவில் நம்பமுடியும் என்பது எளிதன் று எனினும், மாகர், செல்வம் நிறைந்த அந்தணர் மரபில் தோன்றியவர் என்பதும், தந்தையைப் போலவே தனயனும் தாராள மனப்பான்மை யுடையவன் என்பதும் ஐயத்திற்கு இடமில்லாமல் தெற்றென விளங்கக் கூடியைைவயே.
காலம்
மாகருடைய காலத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் மிகப் பலவாகும் சிலர், அவர் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என்பர் : பின்னுஞ் சிலர் அவரை எட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு ஈர்த்துச் செல் கின் றனர். எனினும் பெரும்பாலான மக்கள், அவரை ஏழாம் தாற்றுண்டின் பிற்பகுதினர் என்றே கருத விழை கின்றனர். எனவே அக்கருத்து ஏற்குந் தகையதாகவும் பொருத்தமுடையதாகவும் தோன்றுகிறது.
நூல்
மகாகவி மாகர், பல நூல்களை எழுதவில்லை. அவரி யற்றியது. “ சிசுபாலவதம் " என்ற ஒரேயொரு நூலாகும். ஒரு பெருங்காவியத்திற்கு, பலதிறப்பட்ட பருவங்களின் வருணனை, வைகறை, மன்னர்களின் மரபு, சண்டைகள், போர்கள் போன்றவற்றின் விளக்கங்கள் எவ்வாறு இன்றி யமையாதன வோ, அவ்வாறே, இப்பெருங் காவ்யத்திலும் யுதிஷ்டிரர் செய்த இராஜசூய யாகத்தில், ஸ்ரீகிருஷ்ணன் புரிந்த சேதிநாட்டரசனான சிசுபாலனுடைய வதத்தைக் கூறும் மகாபாரதக் கதைப்பகுதி, இருபது நீண்ட சருக்கங் களில் பலதிறப்பட்ட சுவை நிறைந்த நிகழ்ச்சிகளுடன் விரிவாகக் கூறப்பட்டுளது. பல இடங்களில் ஆழ்ந்த அரசியல் அறிவுரைகள் காணப்படுகின் றன; புதிய முறை யில் அணிகள் அழகுற அமைந்துள்ளன களைப் பெரிதும் விழைந்து பேணினார் மாகர், அணி எனவே, அவரது இட்பெருங் காவ்யத்தில், யமகம் ஒத்த ஒலிகளையுடைய எழுத்துக்கள் அல்லது சீர்கள் பொருள் வேறுபடச் செய் புளில் (பின்னும்) வரும் மடக்கு எனப்படும் அணி), சிலேஷை ஒருவடிவமாக நிற்கும் சொற்றொடர் இரண்டிற்கு மேற்பட்ட பொருளுடையதாக வரும் அணி), அனுலோமம், ஏகாக்ஷரம் (உயிரோடு தனித்தும் ஒரே மெய் (எழுத்து வரும் மிறைக்க விடசித்திரக்கவி), சர்வதோபத்ரம் (64 அறைகளுள்ள சதுரமொன்றில், 32 எழுத்துக்களைக் கொண்ட செய்யுள் ஒன்றை இருமுறை எழுதிச் சதுரத்தின் எம்முகத்தினின் றும் தொடங் கின் அது படிக்க வரும்படி அமையும் மிறைக்கவி), பிரதி லோமம், போன்ற பலதிறப்பட்ட அணிகள் (ஒலியையும் பொருளையும் சார்பாகப் பெற்றவை) எண்ணிறந்தவை எடுத்துக்காட்டாக இயங்குகின்றன.
மகா கவி மாகர், தமக்கு முன்னிருந்த கவிஞர் பாரவியை விஞ்ச வேண்டுமென நெஞ்சில் நினைந்துப் பெரிதும் முயன்றார் ; அம்முயற்சியில் வெற்றியையும் பெற்றார். பாரவியின் பெருங் காவ்யம்,"श्रियः कुरूणाम धिपस्य पालनीम् ",எனத் தொடங்குவது போலவே, மகாகவியும், தமது மகா காவ்யத்தை, "श्रिय: पतिः श्रीमति शसितुं जगत् " என்ற முதற் செய்யுளில் "श्री" என்னுஞ் சொல்லைக் கொண்டே தொடங் குகிறார். பாரவி பரமசிவ பக்தராதலின், தமது மகாகாவ்யத்தில், சிவபெருமானையே சிறப்பித்துக் கூறியுள்ளார் அங்ஙனமே, மகாகவி மகாவிஷ்ணுவை வழிபடுவோராதலின் திருமாலையே தம் நூலில் பெருமையாகப் பேசியுள்ளார், பாரவி, தமது நூலில், ஒவ்வொரு சருக்கத்தின் இறுதிச் செய்யுளிலும் “லக்ஷ்மி'' என்னுஞ் சொல்லை உபயோகித் துள்ளார் அதைப்போலவே, மகாகவியும், தம் நூலில் ஒவ்வொரு சருக்க இறுதிச் செய்யுளிலும், " ஸ்ரீ: " என்னுஞ் சொல்லையே பயன்படுத்தியுள்ளார். இதனால், " பாரவியைக் காட்டிலும் எவ்வகையிலும் முன்னிற்கவேண்டும், அவரது பொன்றாப் புகழைப் பொன்றும்படி செய்யவேண்டும்” என்ற கருத்துடனேயே, தமது பெருங்காவ்யத்தை இயற்றினார் மகாகவி மாகர் என்பது நன்கு புலப்படுகிறது.
[ श्रियः पतिः श्रीमति शासितुं जगज्जगन्निवासो वसुदेवसद्मनि ।
बसन्ददवितरन्तमम्बराद्धिरण्यगर्भागभुवं मुनि हरिः॥"
(1-1) (शिशुपालबधम् । ) ]
“மகா-காவ்யம் (சிசுபாலவதம்) "
மாகருடைய மகாகாவ்யமாகிய "சிசுபாலவதத்தில் இருபது சருக்கங்கள் இருக்கின் றன. தம் கருத்து முழுவதையுஞ் செலுத்தி, ஒரு மகா காவ்யத்திற்கு இன்றியமையாத இயல்புகளை யெல்லாம் ஒருசேரநன்கு அமைத்துள்ளார்.
சிசுபாலவதத்தின் முதற் சங்கத்தில், 4 சந்தேசம் (செய்தி) கூறப்படுகிறது. இரண்டாம் சருக்கத்தில் அரசியல் நுட்பங்கள் நுவலப்படுகின் றன. பின்னர், பிரயாணம் பேசப்படுகிறது. ஆருஞ் சருக்கத்தில், பருவங்கள் வருணிக் கப்படுகின்றன. நான்காம் சருக்கத்தில் ரைவதக பருவத் தின் சித்திரம் காணப்படும் பின் வருஞ் சருக்கங்களில் பலதிறப்பட்ட ஏனைய பொருள்களோடு, மாலைப்பொழுது இருள், சந்த்ரோதயம், இளநல நங்கையர் நீராடல் முதலியன சுவையொழுகப் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறாம் சருக்கத்தில், சிசுபாலனுடைய தூதனுக்கும் சாத்யகி (aras:) யுக்கும் இடையே காரசாரமான விவாதம் நிகழ்கின்றது பத்தொன்பதாம் சருக்கத்தில், சித்திரப்பந்தங்களினால் போர் சித்தரித்துக் காட்டப்படுகிறது.
"माघे सन्ति त्रयोगुणा: ''- மாகரிடத்தில், மூன்று பண்புகளுங் காணப்படுகின்றன"- (மூன்று பண்புகள் உவமை, பொருட்செறிவு, சொற்பொலிவு) என்ற உரை ஆதாரம் அற்றதன்று. மனத்தைக் கவரும் மாகருடைய நூலில், பல இடங்களில், இம்மூன்று பண்புகளும் மலிந்து கிடத்தலை நன்குணரலாம். மாகருடைய சொற்கள் மிகவும் பொருத்தமும் பொலிவும் உடையவைகளாக அமைக்கப் பட்டுள்ளன; அவற்றைமாற்றி அவற்றின் இடங்களில் வேற்றுச் சொற்களைப் பொருத்துதல் என்பது இயலாத காரியம், அவருடைய சொல்லாட்சியின் திறத்தை உயர்த் துரைக்காமல் இருக்கமுடியாது. அவை, உண்மையிலே, நம் புகழுக்கு உரியனலே.
மாகர், தலையாய கவின் கெழு கவிஞர் மட்டும் அல்லர் அவர் பல நுண் கலைகளையும் கற்றுணர்ந்த பெரும் புலவரும் ஆவர். அறிவின் பலதுறைகளின் மெய்ப்பொருள்களையும் உய்த்துணரும் நுட்பங்களையும் எளிதில் எடுத்துரைக்கும் அவருடைய ஆற்றல் சாலவும் ஏற்றமுடையது. அவருடைய நூலகத்து, விழுமிய வேத-வேதாந்தப் பொருள்களிலிருந்து அரசியலைத் தழுவிய பொருள்கள் வரையிலுள்ள பலதிறப் பட்ட துறைகளில் அவருக்கிருந்த ஆழ்ந்த புலமையைப் புலப்படுத்தும் சான்றுகள் எண்ணிறந்தன இருக்கின்றன.
இவையாவும் அவர் பல்கலைப் புலவர் என்பதனை விளக்கு கின் றன பல இடங்களில், வியாகரணத்தில் தலை சிறார், நூல்களின் குறிப்புக்கள் காணப்படுகின்றன. பலராமன் உத்தவர் என்றவர்களின் வாயிலாக, அரசியல் நுட்பங்கள் வெளியிடுகிறார். நாட்டியக் கலையின் சூல்மமான விஷயங் களைக் காட்டியுள்ளார் அருங்கலைகள் பலவற்றில் பெருர் தேர்ச்சியுடையவர். இசைக்கலை வல்லுநர் என்பது அவர் கூறும் இசை நுணக்கங்களிலிருந்து தெளியப்படும் அணியில் அவருக்கிருந்த ஆற்றல் தலை சிறந்தது; இத்துரை யில் அவருக்கு இணை அவரே அணிக்கு அரசர் என்றே அவரைக் கூறல்வேண்டும். அரசியல் துரையிற் கடின மான வினாக்களையும் இன்னல் தரும் பொருள்களையும் எளிதில் விளக்கும் வகையில் இனிய செய்யுட்களின் வடிவில் வடித்துக் கொடுத்துள்ளார். அலங்காரக் கவி என்ற தமது உயரிய இருக்கையில் வீற்றிருந்து, “சொற்களும் அவற்றின் பொருள்களுமே காவ்யத்தை யாக்கும் பெற்றியன கருதுகிறார் மகாகவி மாகர். ஹிந்து-தர்ம-தர்சனம், எனக் பௌத்தமதக் கொள்கைகள், நாட்டியக்கலை, அணியிலக் கணம், வியாகரணம், சங்கீதம் முதலிய நுண்கலைகளில் அவருக்கிருந்த புலமை தலைசிறங்ததாகும் தமது மகா காவ்யத்தில், செய்யுள் தேவியைச் சிறப்பிக்கத் தமது முழு ஆற்றலையும் பயன்படுத்தியுள்ளார்.
மாகரின் மகா காவ்யத்திற்கு ஆதாரம் பாகவத புராணமே. ஆராய்ந்து அழகிய சொற்களை அமைப்பதில் மாகர் வல்லுநர் ; வழிகாட்டும் ஆசிரியர். மாகரின் கருத்துப் படி, ஒரு நற்காவ்யத்தின் இலக்கணம் என்னவெனில் அது வக்ரோக்தி என்ற அணியினால் அழகு செய்யப் பெற்றதாய், சொல்லழகும் பொருட்சிறப்பும் செறிந்த அலங்காரமணிகளை யாருடைய தாய் இருத்தல் வேண்டும் என்பதாகும். இப்பெருங் கால்யத்தில் எண்ணிறந்த சமாசங்களும், சிறந்த வருணனை களும் விளங்குகின்றன. பலதிறப்பட்ட மலர்களால் தொடுக் கப்பட்ட மாலையைப் போல, இப்பெருங் காவ்யத்தில் பற்பல இடங்களில் தலையாய காவ்யத்தின் இயல்புகள் யாவும் ஏற்ற வகையில் இயங்குகின்றன. "கீதி சந்தம்" (முதற்பாதம் மூன்றாம் பாதங்களில் 12 அசைகளையும், இரண்டாம் நான்காம் பாதங்களில் 18 அசைகளையும் அமைத்துச் செய்யப்படும் செய்யுள் வகை) என்ற செய்யுள் நடையைப் பல இடங்களிற் பயன் படுத்தியுள்ள திலிருந்து, இவருடைய கலித்திறனும், பாராட்டும் பண்பும் வெளியாகின் றன. மாலினீ சந்தத்தைப் (ஒவ்வொரு பாதத்திலும் 15 அசைகளையுடைய செய்யுள்) பயன்படுத்துவதிற் பேராசிரியர் இவர். மகாகவி மாகர், மலைகள், பருவங்கள், நீர்விளை யாடல், திங்களின் எழுச்சித் தோற்றம், வைகறை போன்றவற்றைத் திறம்பட கவிமரபிற்குச் சேர, சொல்லோவியங்களாக நம்முன் நிறுத்துகின்ருர். ரைவதக பருவதத்தைப் பாங்குற வருணித் துள்ளமை பற்றி இவர் கண்டா மா கர் (மணிமாகர்) எனப் பாராட்டப்படுகிறார். ரைவதக பருவதத்தை யானையாக வும், அதற்கு இருபுறங்களிலுமுள்ள சூரிய சந்திரர்களை யானையின் இருபுறங்களிலும் தொங்கும் மணிகளாகவும் இவர் கூறியது, பண்டைய ஆராய்ச்சியாளரின் உள்ளங்களை உவகையாற் கவர்ந்தது. அது காரணமாக எழுந்த களிப்பின் மேம்பாட்டால், இவரை கண்டா மாகர்” எனப் பரிவுடன் பேசலாயினர்.
இங்ஙனமாக, மேலே சுட்டப்பட்ட இயல்புகளெல்லாம் நன்கு வாய்க்கப் பெற்ற கவிஞர் மாகர், அவருடைய கல்வி அறிவு ஆற்றல்களினால், ஸம்ஸ்க்ருத ஸாஹித்யம் என்னும் அகன்ற ஆகாயத்தில், வெள்ளி நட்சத்திரத்தைப் போல என்றும் பேரொளி பரப்பி விளங்கிக் கொண்டிருப்பார் என்பதிற் சிறிதும் ஐயமில்லை.
****************************
No comments:
Post a Comment