பாரவீ (भारवी)
ஸம்ஸ்க்ருத ஸாஹித்தியத்தில், புகழ்பெற்ற புலவருள்ளே, பாரவிக்குத் தனிப்பட்ட சிறப்புடைய இடமுண்டு, பாரவியைப் பற்றி, "भावार्थ गौरवम्" ( பொருட் பெருமைக்குப் பாரவி''). என்று பலராலும் பெருமிதமாகப் பேசப்படும் புகழுரை யொன்றுண்டு. " उपमा कालिदास '- அதாவது, " உவமை களில் ஒப்புயர்வு அற்றவர் காளிதாஸர் என்பதைப் போலவே, பொருட்செறிவு- பொருள்களின் பெருமை பாரவியின் பெருமை. (भा+रवि:)= சூரியனது பேரொளி, உண்மையில், பாரவியின் பெருமை, சூரியனுடைய பேரொளிக்கு ஒப்பானதே.
பாரவி தென்னிந்தியாவைச் சேர்ந்தவர். பாரவியின் காலம், ஏறக்குறைய இயேசு கிரிஸ்து பிறப்பதற்கு 634 ஆண்டுகளுக்கு முற்பட்டதெனக் கருதப்படுகிறது மகா ராஷ்டிர மன்னனான விஷ்ணுவர்த்தனனுடைய அவைப்புலவராக இயங்கினார் பாரவி.
பண்டைய காலத்தில், மன்னர்கள், பேரரசர்கள் என்ற வர்களுடைய அவைக்களத்தில், காவியப் புலவர்களும் ஓவியக் கலைஞரும் இசைவல்லுநரும், எண்ணில்லாத ஏனைய நுண்ணிய கலையறிஞரும் போற்றற்குரிய இடத்தைப் பெற்றிருந்தனர். இக்காரணத்தால், பலகலைத் துறைகளில் தேர்ச்சியுற்ற அப்புலவர் பெருமக்கள், அரசர்களுடைய நெருங்கிய தொடர்பினால், தம்முடைய முழு ஆற்றல்களையும் நன்கு புலப்படுத்த ஏற்ற வாய்ப்புகளைச சாலவும் பெற்றிருக் தனர். பெரும்பாலான சம்ஸ்கிருதப் புலவர்கள், அரசர் களுடைய சபைகளை அலங்கரித்து வந்தார்கள். பாரவியும், பல்கலைப் பிரயனான தக்காண அரசன் விஷ்ணு வர்த்தன லுடைய அவைக்கண் தலைமைப் புலவராக விளங்கிஞர். அக்காளிலேயே அவரது பெரும்புகழ் தென்னிந்தியாவில் எங்கும் பரவியிருந்தது.
பாரவி, பேரும் புகழும் பெறுவதற்குக் காரணமாயிருந்த நூல், '' கிராதார்ச்சுனீயம் " என்பதாகும். அவரியற்றிய நூல் இஃதொன்றே. இதன் கண் பதினெட்டு சருக்கங்கள் இருக்கின்றன. இப்பெரிய காவியத்தில் காணப்படும் கதைப்பொருள் மகாபாரதத்தில் இருந்து எடுத்துக் கொள்ளப்பட்டது.
கிராதார்ச்சுனீய கதைப்பொருள்
பேரரசர் யுதிஷ்டிரர், சூதாட்டத்தில் தோல்வியுற்று த்வைதவனம் என்னும் அரண்யத்தை யடைகின்றார். அங்கிருந்து வேடனொருவனை த் துரியோ தனனுடைய நாட்டிற்கு அனுப்புகிறார் அவன், துரியோதனனுடைய அரசாட்சி நிலையை நன்கறிந்து கொண்டு த்வைதவனத் திற்குத் திரும்ப வரவேண்டுமென்று ஆணையிடப்படுகிறான்.
அவ்வேடன், அவ்வாறே துரியோதனன் நாட்டிற்குச் சென்று அனைத்தையும் அறிந்து வந்து, யுதிஷ்டிரரிடம் பின் வருமாறு சொல்லலுற்ருன், " துரியோதனின் ஆட்சி முறை மாட்சிமையுடையதாக இருக்கிறது; அவனது ஆட்சி எவ்விதத்திலும் மகிழ்ச்சியைப் பயப்பதாகவும் நலந்தருவதா கவும் உளது .
இச்சமயத்தில், பீமனும் திரௌபதியும் யுதிஷ்டிரரைப் போருக்கெழுமாறு பெரிதுந்தூண்டினர்: ஆனால் அவர் சொன்ன சொல்லைத் துறந்து, அவ்வாறு செய்வதற்கு ஒப்ப வில்லை. இதனிடையில் பகவான் வேதவியாஸர் அவர்களி டத்துக்கு வந்தார். அப்பெரியார், அர்ச்சுனனை, இந்திரகீலம் என்னும் பருவதத்திற்கு அனுப்பிப் பாசுபதம் என் னும் பேராற்றல் வாய்ந்த அஸ்த்ரத்தைப் பெறுமாறு உபதேசித்து அருளினார். அர்ச்சுனன், ஆண்டுச் சென்று மாதவம் புரிந்து பகவான் சங்கானை மகிழ்ந்து, அவரிடமிருந்து பாபதாஸ்த் ராத்தைப் பெறவேண்டும்.
அங்கனமே, அர்ச்சுனன், இந்திரகீல மலையையடகந்து செயற்கறிய அருந்தவத்தை மேற்கொள்ளுகிறான். அவனுடைய நிலையைக் கலக்கி, இடையூறு விளைவிக்க, விண்ணுலக மாதர் சிலர் மண்ணிடை வந் து அவன து கருத்தை வேறு படுத்தப் அர்ச்சுனன் பல்வகையாலும் முயல்கின்றனர். ஆனால் உறுதியான தன் தவநிலையிலிருந்து ஒரு சிறிதும் மாறுபடவில்லை. பின்னர், இந்திரனே, அர்ச்சுனன் தவஞ்செய்யும் இடத்திற்கு வந்தான். அவன், தன் மகன் அர்ச்சுனனை நோக்கி, " நின் குறிக்கோளை எய்துவதற்குச் சிவபெருமானை இடையறாது வந்தித்து வழிபட்டு அவனருளைப் பெறுவாயாக என அறிவுரை வழங்கி, ஆசீர்வதித்து அகன்றான்.
இந்திரனுடைய அறிவுரையை மேற்கொண்டு, அர்ச்சு னன், சிவபெருமானையே இடையறாது சிந்தித்து வந்தித்து நின்றான். அர்ச்சுனனைப் பரிசோதிக்கக் கருதி பரமசிவன் கிராதன் (வேடன்) உருவந் தாங்கி வந்தான். அத்தருணத் தில், மாயப்பன் றி ஒன்று அர்ச்சுனன் மீது பாயப் பார்க் கின் றது. கிராதன் உருவந்தாங்கிய சிவபெருமானும் தவக்கோலத்திருந்த அர்ச்சுனனும் ஒரே காலத்தில் அப்பன் றியின் மீது அம்பு தொடுக்கின் றனர். அர்ச்சுனனால் தொடுக்கப்பட்ட அம்பு அப்பன்றியைக் கொன்று, விடுத்த வேலையை முடித்துப் பின்னர் நிலத்தினுள்ளே சென்றிட்டது. எஞ்சியிருந்த அம்புகாரணமாக, இருவரிடையே சொற்போர் எழுகிறது, அது மற்போர் விளங்கியது.
அப்போரில், ஒருசமயம் அர்ச்சுனன் மேம்பட்டுக் காணப்படுகின்றான் ; ஒருசமயம் சிவனே சிறப்புறுகிறான் இறுதியில், இருவரும் தோளோடு தோள் கொடுத்துப்போர் புரிகின் றனர். சிவபெருமான், அர்ச்சுனனுடைய அஞ்சா மையும் ஆற்றலையுங் கண்டு களிக்கிறான் ; தனது வேட வடிவத்தைக் களைந்து, உண்மை உருவத்தைக் காட்டி பொருள் கின்றான். தோல்வி என்பதையே அறியாத, பேராற்றல் படைத்த பாசுபதாஸ்த்ரத்தை அர்ச்சுனனுக்கு நல்குகின்றான் சிவன், இவ்வாருக, அர்ச்சுன்னுடைய அருந்தவம் பெரும் பேற்றைப் பெற்று வெற்றிகரமாக முடிந்தது.
பாரவியின் தனிப்பெருங் காவ்யமாகிய " கிராதார்ச்சு னீயத்தில் , ஒருபெறுங் காவ்யத்திற் சிறப்புற அமைய வேண்டிய எல்லா அம்சங்களும் ஏற்ற வகையில் இடம் பெற்றுள்ளன இதன் கண் தலைசிறந்து விளங்குவது வீரரசமே ; எனினும் இன்பரசமும் இனிய முறையில் இடம் பெற்றுளது; ஏனைய ரசங்களும் விடப்பட்டில், ஏற்றவகை யில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இப்பெருங் காவ்யத்தின் தனிச்சிறப்பு என்னவென்றால் இது, "ஸ்ரீ" என்னுஞ் சொல்லுடன் தொடங்குகிறது. முதற் செய்யுளே பின் வருமாறு தொடங்குகிறது
श्रियः कुरूणांमधिपस्य पालनीं प्रजासु दृति यमयुंक्त वेदितुम् ।
स बर्णि लिङ्गी विदितः समाययौ युधि ष्ठिर द्वैतवने वनेचरः ।।
நம் கருத்தைக் கவரும் மற்ருெரு பொருள், ஒவ்வொரு சருக்கத்திலும் இறுதிச் செய்யுளில் "லக்ஷ்மி' என்னுஞ் சொல் பயின்றுள்ளது என்பதாகும். இதிலிருந்து நமக்கு இனிது புலப்படும் பொருள் ஒன்றுண்டு சாதாரணமாக சான்றோர் சொல்லும், பண்களானாவாரானார் எவன்", என்ற வாக்கியத்தை பெரிதும் படுத்தியுள் ளார் பாரவி மகாகவிஞர்.
கிராதார்ச்சுனியத்தில், இயற்கை வருணனை வெகு அழகாக அமைந்துளது. பருவங்கள், சந்திரோதயம் என்ற வற்றின் எழிந்சித்திரங்கள் நம்மாற் பல்காலும் பயிலத் தக்கவை நான்காம் சருக்கத்தில் குளிர்கால வருணனை வளம்பெற்றுள து அது நம் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளா திருக்கமுடியாது. ஐந்தாம் சருக்கம் இமயமலையின் கவின் கெழு காட்சி நிறைந்தது : ஆருஞ்சருக்கம் " யுவதி ப்ரஸ்தான”த்தைப் பற்றிக் கூறும் , எட்டாஞ் சருக்கம் சுராங்கனை யின் விஹாரத்தின் சிறப்பியல்புகளைச் சித்தரிக் கிறது; ஒன்பதாஞ் சருக்கம் சுரசுந்தரியின் சம்போகத்தின் தனிப்பட்ட தன்மையை விளக்கும்.
கவிஞர் பெருமானார், அணிகளைத் திறம்படக் கையாண் டுள்ளார். உவமை, சிலேடைகளின் ஆட்சி பெருஞ்சிறப்புடையது. சித்திர-காவ்யத்தின் படைப்பு கவியின் தனித் திறத்தை வியப்புற விளம்புகிறது. பதினைந்தாம் சருக்கம் முழுவதுமே, இதற்கோர் எடுத்துக்காட்டாக இயங்குகின்றது. எழுத்து ஒன்றை மட்டும் வைத்தே செய்யுளை அமைக்கும் ஆற்றல் அவரது கலையின் விழுத்தகைமையை விளக்கு கிறது
न नोननुलो नुन्नोनो नाना नानानना ननु ।
नुन्नोऽनुन्नो ननुतेनो नानेना नुन्नुन्नुत् ॥" (xv-14.)
கிராதார்ச்சுனியத்தில் அரசியல் விஷயங்கள் மலிந்து கிடக்கின்றன. இதனால், பாரவி அரசியல் நுட்பங்களை நன்குணர்ந்திருந்தார் என்பது இனிது புலனாகிறது. பல்வேறு இடங்களில், பாரவியின் அனுபவ முதிர்ச்சியின் விளைவாகத் தோன் றிய பல கின் றன சீரிய கருத்துக்கள் பொலிவுடன் பிறங்கு பாரவியின் சீரிய மொழிகள், அரசியல்வாதிகள் பொன் னேபோற் போற்றிச்சான் றுகளாகப் பயன்படுத்தக் கூடிய பழமொழிகளாக விளங்குகின்றன.
பீமன், த்ரௌபதி, யுதிஷ்டிரர் முதலியோருடைய உரையாடல்கள் மிகவும் உயர்ந்த தன்மையன. தலைசான் ற அரசிளங் குமரர்கள் போன்றவர்கள் பயன்படுத்தும் பெற்றி யனவாகிய நற்கதை-உபகதைகளை நல்குகின்றது பாரவி யின் இப்பெருங் காவியம்.
*************************
No comments:
Post a Comment