Saturday, January 23, 2021

காளிதாஸர்/KALIDASA


                                            காளிதாஸர்


            ஸம்ஸ்க்ருத ஸாஹித்தியத்தில் சிறந்த புத்தகங்கள் பலவற்றுள், மிகவும் மேன்மையாகக் கொண்டாடுவதற்கு உரியவை மகாகவி காளிதாஸரின் நூல்கள் அவை விலைமதிக்க இயலாத மாணிக்கத்தைப் போலத் தம் பேரொளியை எங்கும் பரப்பிப் பொலிகின் றன் அவற்றை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர் காளிதாஸர், நாடகங் களையும், சிறுகாவ்யங்களையும் (खण्ड काव्य) பெருங்காவ்யங் களையும் (महाकाव्य ) இயற்றியுள்ளார். இதனால், அவரது புலமை பல துரைகளிலும் விளங்கியது என்பது இனிது புலப்படும்.




                                                    பிறப்பு

           காளிதாஸருடைய பிறப்பைப் பற்றிய செய்திகள் பலவாறாகக் கூறப்படுகின்றன. சிலர், அவரை வங்காள - வாசி எனக் கருதுவர்; சிலர், அவரைக் காஷ்மீரத்தைச் சேர்ந்தவர் எனக் அவந்தி-மாளவம் கூறுவர் என சிலர் உரைப்பர் அவரது பிறப்பிடம் அவந்தியின் தலை நகரான உஜ்ஜியினியைச் சேர்ந்தவர் காளிதாஸர் எனவும் அவரது பிறப்பிடமும் அதுவாகவே இருத்தல் வேண்டும் எனவும் ஆராய்ச்சியாளரிற் பலர் எண்ணுகின்றனர்.

          காளிதாஸருடைய பிறப்பிடத்தைப் பற்றிக் கருத்து வேறுபாடு காணப்படுவது போலவே, அவரது வாழ்-காலத் தைப் பற்றியும் பலதிறப்பட்ட கருத்துக்கள் நிலவுகின்றன விக்ரமாப்தத்தின் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார் காளிதாஸர் என ஒரு சாராரும், குப்தர்களுடைய காலத் தவரென ஒருசாரரும் விக்ரமாப்தத்தின் தொடக்கத்தில் விளங்கினார் அவர் எனப் பிறிதொரு சாரரும் புகல்வர்.

           விக்ரமச் சக்ரவர்த்தியின் பேரவையில் வீற்றிருந்த நவரத்தங்களிற் சிறப்புற்று விளங்கினார் காளிதாஸர் என்பது இந்தியப் பெருமக்களிற் பலரின் கருத்து. காளிதாஸருடைய நூல்களிலிருந்தும் இவ்வுண்மை இனிது புலப்படும் விக் .. மோர்வசியம் என்ற காளிதாஸ நாடகத்தின் தலைவன் (திகிரிமன்னவருள் ஒருவனான) புரூவனாக இருந்தபோதிலும் அதன்கண் காணப்படும், விக்ரமனைப் பற்றிய சில குறிப்பு களினால், காளிதாஸர், விக்ரம் து காலத்தவர் என்பது தெற்றென விளங்கும். எனவே, விக்ரம அரசரின் போவையை அணிசெய்த நவமணிகளில் நடுநாயகமாக விளங்கினார் புலவர் பெருந் தகை காளிதாஸர் என்பது நனி பொருந்துமாறு இனிது புலப்படும்.

             வரலாற்றுச் செய்திகளால், விக்ரமன், மாளவநாட்டு மன்னன் என்பது கொள்ளக் கிடக்கும், சகர்களைச் சமரில் வென்றபின்னர், அம்மன்னன், சகார்-சகர்களின் பகைவன் என்ற பெயரைப் பெற்றன். அப்போது தொடங்கிய ஆண்டு, " விக்ரம சகாப்தம்', என்ற பெயரால் அழைக்கப் பட்டது. இவ்வாராய்ச்சியின் பயனாக காளிதாஸரின் காலத்தை, கி.பி. முதலாம் நூற்றாண்டெனக் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும்.


                                காளிதாஸரின் நூல்கள்

                 ருது-சம்ஹாரம் ” (பருவங்களின் திரட்டு) என்னும் நூல், காளிதாஸரின் கன்னிப்படைப்பு எனக் கருதப்படு கிறது. இவ்விஷயத்தில், கல்வியாளரிடையே ஒருமைப்பட்ட கருத்தில்லை எனினும். காளிதாஸர் எழுதிய முதல் நூல் ருது சம்ஹாரம், (அன்றி) அது அவரது இளமைப் பருவத்தில் எழுதப்பட்டது என்ற கருத்து, பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தாகும்

                 இச் செய்யுள், ஆறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது இதன்கண், ஆறு பருவங்களும் இனிது விளக்கப் பட்டுள்ளன. இங்கு, முதுவேனில் முதலாக, இளவேனில் சருகவுள்ள ஓராண்டின் ஆறு பருவங்களும் மிகத்தெள்ளிய எளிய, இனிய முறையில் வருணிக்கப்பட்டுள்ளன. இது கவிஞர் பெருமான் முதல் நூல் ஆதலின், அவருடைய ஏனைய நூல்களிற் காணப்படும், அருமை பெருமைகளை எழில் ஏற்றங்களை, பண்பு-திறமைப்பாடுகளை, இதனிடையே காம் காணுமாறு இல்லை


                                         குமார சம்பவம்

                குமாரசம்பவம் , என்னும் காவ்யம் காளிதாஸராற் செய்யப்பட்டதுதான் என்பதனை புல வரனைவரும், சிறிதளவும் ஐயப்பாடின்றி, ஒப்புக்கொள்கின்றனர். இதன் மாட்டு, பதினேழு சருக்கங்கள் இருக்கின்றன. குமாரகார்த்திகே யனது பிறப்பைச் சிறப்புற வர்ணிப்பதோடு, தமது காவ்யத்தை முடிக்கக் கருதினார் கவிஞர் பெருமானார் , ஆனால், அக்கருத்து நிறைவேருமையினால், காவ்யம் முற்றுப் பெற்றிலது.

                 இப்பெருங் காவ்யத்தில், பதினேழு சருக்கங்கள் (உட்பிரிவுகள்) உள்ளன. முதல் எட்டுச் சருக்கங்கள் மகா கவி காளிதாஸரால் இயற்றப்பட்டவையே என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை : ஆனால், ஒன்பதாம் சருக்கத் திலிருந்து எஞ்சியுள்ள பகுதியை காளிதாஸர் எழுதினார் என உறுதியாக உரைக்க இயலவில்லை. இவ்வெஞ்சிய பகுதியை, அத்துணை நுண்ணிய புலமையைப் பெருத கவிஞரொருவர் எழுதிமுடித்திருத்தல் வேண்டும் எனக் கருதப்படுகிறது. காளிதாஸரின் நூல்களுக்குத் தெள்ளிய உரை வகுத்த, மல்லிநாதரும், முதல் எட்டுச் சருக்கங்களுக் கே தமது உரையை தீட்டினார் இஃதும், " குமரசம்ப வத்தின் முதல் எட்டுச் சருக்கங்களையே எழுதினார் காளிதாஸர் என்பதனை மேலும் வலியுறுத்துஞ் சான்றாகும்.

                  எடுத்துக்காட்டாக இயங்கும் திவ்ய தம்பதிகளான பார்வதி-பரமேஸ்வரர்களின் வருணனையும், பார்வதிதேவி யாரின் கடுந்தவக்கோலமும், சிவபெருமானது தெள்ளிய சிந்தனையின் சீரிய நிலையுமே, இக்காவியத்தின் தூய சுவை கெழுமிய பகுதிகள் என்பதனை யாவரும் அறிவர்


                         மேகதூதம் ("முகில்விடு தூது'')

                காளிதாஸருடைய நூல்களில், "மேகதூதம்" பொன்றாப் புகழ்வாய்ந்தது. வடமொழியில் மட்டுமே இதற்கு ஐம்பதிற்கு மேலாக உரைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றால் இதன் மேம்பாட்டைக் கூறவும் வேண்டுமோ இவையன் றியும், இதனைத் திபேத்தியரும் சிங்களவரும் தம் மொழிகளிற் பொறித்துக்கொண்டுள்ளனர் இக்காலத்தி லோ, நம்நாட்டிலும் பிறர் நாடுகளிலும் உள்ள பலமொழி களில் இதனை பெயர்த்துள்ளனர் இன் சுவையுணரும் மக்கள்.

             " மேகதூதம்" சுவிஞர்களுடைய பெரிதும் கருத்துக்களைப் கவரந்தமையால், காளிதாஸருக்குப் பிற்பட்ட கவிகள், "சந்தேகச்செய்யுள்' என்ற தனிப்பட்ட முறையே வகுத்திட முற்படுவாராயினர். சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழும் " மேக தூதத்தைப் " பின்பற்றி, "சந்தேச காவ்யத் தொடர் எழுவதாயிற்று

               மேக தூதத்திற் காணப்படும் காளிதாஸரின் வளமார்ந்த கற்பனை காட்சிகள், அவரது இயல்பான பெருமைக்குச் சான்று பகர்கின்றன. மேகத்தை தூதன் ஆக்கி யக்ஷன் ஒருவன், தனது பிரிவற்குமையால், இமயத்து உச்சியிலுள்ள யக்ஷர்களுடைய தலைநகரான அளகாபுரியில் இருந்து கொண்டு மிகவும் வருந்து கின் ற தன் காதற் கிழத்தியினி டத்துத் துன்பம் நிறைந்த தனது செய்தியைப் போக்கு கின்றான். அவ்ய க்ஷனும், தன் நாயகியின் பிரிவின் பொருட்டு தென் திசைக்கண் சேணெடுந்தூரத்திலுள்ள ராம்கிரியில் இருப்பவள் மிகவும் வருந்தி வாடுகிறான்.

                பரந்த விண்ணிற் சஞ்சரிக்கும் உயிரற்ற பொருளாகிய மேகத்தை (முகிலை)த் தூது விடுங்கால் கவிஞர் கூறுகிறார் :

           घूमज्योतिः सलिलमरुतां सन्निपातः क मेष: 

           संदेशार्थाः क पटुकरणैः प्राणिभि: प्रापणीयाः । 

           इत्यौत्सुक्यादपरिंगणयन्गुह्यकस्तं ययाचे

           कामार्ता हि प्रकृतिकृपणाश्चेतनाचेतनेषु ।

                 அதாவது, " புகை, மின்னல், நீர், காற்று என்றவற்றின் சேர்க்கையாலான அறிவற்ற மேகம் எங்கே. அறிவுச் சுடராய் இயங்கும் மக்கள் வழியாக அனுப்பப்பெறும் அர்த்தம் நிறைந்த செய்தி எங்கே? இவ்விரண்டிற்கும் இடையில் எவ்விதத் தொடர்பும் இல்லை, (விண்ணிட்கும் மண்ணிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகள் உண்டு.) பெரு விருப்பினால் தூண்டப்பட்டவ னாக, அசேதனப் பொருளாகிய மேகத்தினிடத்து வரம்பிகந்து முறையிடுகிறான் அவ்யக்ஷன் இவ்வாறு குறையிரக்கக் காரணங் தான் யாது ? அன்புடை யாரைப் பிரிந்துத் துன்புறுகின்ற உள்ளத்தையுடைய ஒருவன், சேதனாசேதன அறிவுடைய அறிவில்லாத பொருள் களிடையே உள்ள வேறுபாடுகளைக் காண்பதற்கு இயலாத நிலையில் இருத்தல் இயல்போேயாகும்.

                  தூதுவர் மூலமாகக் காதற் செய்திகளை அனுப்பும் குறிப்புகள் ஸ்ரீராமாயணத்திலும் மகாபாரதத்திலுங் கூடக் காணக்கிடக்கின்றன. ஸ்ரீராமன், அநுமாரைச் சீதாபிராட்டி யாரிடம் தூதாக அனுப்பினான். இங்கு, அரக்கண் இரவாண னால் அபகரித்துச் செல்லப்பட்ட தேவியின் பால், இராம பிரானது தூய செய்தியைத் தாங்கிச் சென்ற அநுமான் அன்பினால், பக்தியிற் செறிந்த உள்ளம் படைத்த உத்தம ஊழியன். மகாபாரதம், நளன் தன் காதற்கருத்தைத் தமயக் தனிடம் தெரிவிப்பதற்கு ஓர் அன்னத்தை தூதுவிடுத்த செய்தியைக் கூறும். ஆனால், அசேதனப் பொருளாகிய முகிலை (மேகத்தை)த் தூது அனுப்புவதற்கு உரியவாயிலாகக் கொண்டது, மகாகவி காளிதாஸரின் புதிய அரிய கற்பனைத் திறமே.

             எவ்வகையாக நுணுகி ஆராய்ந்து பார்த்தாலும் மேகதூதம்” ஒரு தலைசிறந்த செய்யுள் (காவ்யம்) என்பது நன்கு போதரும். இதன் கண், "பூர்வமேகம்", "உத்தர மேகம்” என்ற இரண்டு பகுதிகளுண்டு. இக்காவ்யத்தில், காளிதாஸரின் கவித்திறமை மேம்பட்டு மிளிர்கின்றது. காளிதாஸரின் அற்புதப் படைப்பின் காரணமாக, காதலி யைப் பிரிந்த யக்ஷனும், காதலனைக் காணாத காரிகையும் என் றும் இறவாத் தன்மையைப் பெற்றுவிட்டனர். மேக தூதத்தைப் போன்ற காவ்யத்தை ஆக்கியமையால் ஸம்ஸ் க்ருத ஸாஹித்திய உலகிடையே இலகொளிவீசும் விளக்கினை க் காளிதாஸர் குன்றின் மேல் தூக்கியவர் ஆயினர்.


                   “ இரகுவம்சம் - (ரகுவின் மரபு)"

              " இரகுவம்சம் " ஒரு மகாகாவ்யம் (பெருங்காப்பியம்) இது, பத்தொன்பது சருக்கங்களைக் கொண்டது. இந்திய ஆராய்ச்சியாளரிற் சிலர் இதனைக் காளிதாஸரின் படைப்புக் கள் யாவற்றிலும் தலைசிறந்ததாகக் கொள்வர். வருணனை களைச் சற்றே உற்றுநோக்குவார்க்கு, ஆரிய அரசரின் சீரிய ஒழுக்க நெறியினைக் கண்கூடாகக் காண்டல்  கூடும்.

கவிஞர் பெருமான் பின்வருமாறு புகல்கின்றார் : 


                 सोऽहमाजन्मशुद्धानामाफलोदय-कर्मणाम् । 

                 आसमुद्रक्षितीशानामानाकरथव्मनाम् ।। 

                 यथा विधि हुतामीनां, यथाकामाचिंतार्थिनाम् । 

                 यथापराधदण्डनाम् , यथा कालप्रबोधिनाम् ।। 

                 त्यागाय संभृतार्थांनाम्, सत्याय मितभा षिणाम् ।

                 यशसे विजिगीपूणां, प्रजायै गृहमेधिनाम् ॥ 

                 शैशवेऽभ्यस्तविद्यानां, यौवने विषयैषिणाम् । 

                 वार्थ के मुनिवृत्तीनां, योगेनान्ते तनुत्यजाम् ॥ 

                 रघूणामन्वयं वक्ष्ये, तनुवाग्विभवोऽपि सन् ।

                 तद्गुणैः कर्णमागत्य, चापलाय प्रचोदितः ॥

                 तं सन्तः श्रोतुमिच्छन्ति (श्रोतुरमहेन्ति), सदसद्ग्यक्त हे तव: । 

                 हेन्नः संलक्ष्यते ह्यग्नौ विशुद्धिः श्यामि काऽपि वा ॥


              இவ்வாறே, ரகுவின் பிறப்பினைப் பற்றிப் பேசும் பகுதி யும் சுவைமிகுந்ததாகும். திலீபமன்னன், தன் இராணி சுதக்ஷிணையுடன், முனிபுங்கவர் வசிஷ்டரின் புனிதமான ஆஸ்மரத்தைச் சென்றடைகிருன். ஆண்டு, நந்தினி என்னும் தெய்வப் பசுவை வழிபட்டு அதன் அருளால் உலகம் போற்றும் உத்தமபுத்திரனாகிய ரகுவைப் பெறு கின்றான். ரகுவானவன் திக்விஜயஞ் செய்து, முந்தையோர் முறைப்படி, தனது முதுமைப் பருவத்தில் தனக்குரிய பொருள்கள் எல்லாவற்றையும், வழங்கும் வேள்வியினை மேற்கொண்டு முடிவில் தன் செல்வமனைத்தையும் தக்கார்க்கு ஈத்து இன்புறுகின்றான். அரசாங்க அலுவல்கள் அனையவற்றையும் தன் மகன் அஜனிடம் ஒப்படைத்துத் தன் வாழ்நாளின் எஞ்சிய பகுதியை, மட்கலங்களை மட்டும் வைத்துக்கொண்டு, மிக எளிய முறையில் கழிக்கக் கருதினான். இத்தகைய நிலையில், வரதந்து முனிவரின் மாணவன் ஆன கௌத்வின் என்பான் குவைக் காண்ப தற்கு கண்ணினன், தன் குருவிற்குத் தக்ஷிணையாகக் கொடுப்பதன் பொருட்டும் பதினான்காயிரம் பொற்காசுகள் நல்குமாறு சகுவை வேண்டி நின்றான். நல்ல குடியிற் பிறந்தவர் கல்கூர்ந்தார் (வறுமையுந்குர்) ஆனாலும் இரப்ப வர்க்கு இல்லை என்ற சொல்லைக் கூறமாட்டாரன்றே? தொல்குடியில் தோன்றிய, வரையாது வழங்கும் வள்ளலாகிய பருமன்னன் அவவெளிய நிலையிலும், தன் பேராற்றலின் வலிமையால் குபேரனிடம் இருந்து உரிய பொருளைப் பெற்று, கெளத்ஸனை மகிழ்வித்தான் என்ன ரகுவின் ஆற்றல் என்னே அவனது ஏற்றம் ! இது ரகுவின் வாழ்க்கையிற் பெரிதும் போற்றற்குரிய அருஞ்செயலாகும்.

                   அடுத்துவரும் சருக்கங்களில், இந்துமதியின் சுயம் வரத்தில் தீட்டப்பட்ட சுவின் கெழு காட்சிகளும், அஜன து புலம்பலில் நிறுத்தப்பெறும் உருக்குபோன்ற உள்ளத்தையும் உருக்கும் நிலைகளும், காளிதாஸரின் சிறப்பினை விளக்குவன ஆகும் கவித்திறத்தின்

                  பத்தாஞ் சருக்கக் தொடங்கிப் பதினைந்தாம் சருக்கம் வரை, ஸ்ரீராமபிரானுடைய வாழ்க்கை வரலாற்றை விரித் துரைக்கின் கார் கவிஞர் பெருமானார், பதின் மூன்றாம் சருக் சுத்தில், இலங்கையிலிருந்து புஷ்பகவிமானத்தில், அயோத் தியா நோக்கி வருகையில், ஸ்ரீராம பெருமான் தரும் புனிதத் கவரா க யெய விளக்கங்கள் நம் உள்ளங்களை இயலுமோ பதினான் காம் சருக்கத்தில் வரும் சீதாபிராட்டியாரின் வாழ்க்கைச் சித்திரம் சாலவும் தி து. இங்கு, இங்ஙனம், இந்தியப் பெண்மணி Gur அணியாகவும், விழுப்பம் தரும் ஒழுக்கம் அன்புகண்பு முதலிய கற்பண்புக்கெல்லாம் உறைவிடமாக வும் இருத்தல் கட்டுமென்பது இனிது விளக்கப்பட்டுள்ளது இவ்வாருக, இந்தியப் பண்பாட்டின் அருமை பெருமைகளைத் திறம்பட எடுத்துரைப்பதற்குக் காளதாஸரைப் போன்ற மலாகங்களால் மட்டுமே இயலும் என்பது உணரற்பாற்று.

                    இதன்பின்னர், பல மன்னர்களைப் பற்றிய சாதாரண குறிப்புகளே காணப்படுகின்றன. இறுதிச் (19-ஆம்) சருக்கத்தில், அக்கிவர்ணன் என்னும் ஒரு மன்னனைப் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. அவன் சிற்றின்பத்தில் ஈடுபட்டவன் இப்பொருகாயும் ஏற்ற முறையில் எடுத்துக் காட்டுவதில் இருந்து எப்பொருளையுங் கூர்ந்து நோக்கும் கவியின் திறமை இனிது புலப்படுகின்றது.

                   இக்காவ்யத்தில், பல மன்னர்களின் நீண்டதொரு மரபு தோற்றம் அளிக்கிறது. இதனை ப் பரிசீலனை செய்தோமானால் பண்டைய பாரதப் பண்பாட்டின் விரிவான, விளக்கமுடைய விழுமிய ஓவியக்காட்சி காணப்படும்

                    இரகுவம்ச காவ்யத்தில், பலதிறப்பட்ட அழகொழுகும் பொருள்கள் அளிக்கப்பட்டுள்ளன அவற்றுள், மன்ன வனுக்கும் மக்களுக்கும் இடையே அக்காலத்தில் விளங்கிய இனிய நெருங்கிய தொடர்பு, அவநெறியை யறவே ஒழித்துக் தவநெறியை மேற்கொண்ட ஆன்றோர், முனிவரர்களின் தூய இருப்பிடங்கள், குருபக்தி, வலிமைவாய்ந்த சேனையின் நிலைமை, விஜய யாத்திரைகள் (வெற்றிச்செலவுகள்), பல்வகைப்பட்ட விருந்து, விருந்து விழாக்கள், எழில் நிறைந்த விசாலமான மன்னர்களுடைய போன் றவை சிலவாகும் மாளிகைகள் என்பன.

                     இவையேயன்றி, இக்காவ்யத்திடையே, பொறி - புலங்களின் அடக்கமுடமை தவ ஒழுக்கம் ஈகை பொறையுடைமை, நிலையற்ற உலகப்பொருள்களிடத்துப் பற்றற்ற தன்மை, வரையாது வழங்கும் (தாராள) மனப் பான் மை, என்றவைபோன் ற இந்தியப் பண்பாட்டின் அடிப்படையிலான பெற்றுள்ளன நற்பண்புகள் பலவும் விளக்கம்

                    வீரம், மெய்யன்பு, இரக்கம் என்றவை அன்ன உரிய உள்ளத்து உணர்ச்சிகள் பலவும் நலம்பட எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. அன்றியும், நூல் முழுவதிலும், ஏற்ற இடங்களில் போற்றற்கு உரிய இனிய அணிகள் பலவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்லின், காவ்யம் காளிதாஸரின் பலதிறப்பட்ட கலைத்திறனைக் காட்டும் கவின் கெழு கருவூலம் (பொக்கிஷம்) என்று கருதப்படுமாறு காணக.


                                " மாளவிகாக்நிமித்ரம்"

                 காளிதாஸர் ஒரு கவிஞர் மட்டும் அல்லர்; தலைசிறந்த நாடக-ஆசிரியரும் ஆவர். அவர் மூன்று நாடகங்களை நல்கி யுள்ளார். அவற்றுள், மாளவிகாக்கிமிதரத்தில்” சுங்க மரபு மன்னன் அக்நிமித்ரனுக்கும் மாளவிகாவுக்கும் இடையே ஏற்பட்ட காதற்சித்திரம் படைக்கப்பட்டுளது. மாளவிகா-அக்கிமிதரர்களுடைய பழங்கதை, கருத்தைக் கவரும் வகையில் கூறப்பட்டுளது. அரசர்களுடைய அந்தப்புரங்களில் அடிக்கடி நிகழும் சச்சரவுகள், பரஸ்பரப் பொறுமைகள், மன்னனது சிற்றின்பச் சிறுமை, பட்ட மகிஷியின் போற்றற்குரிய பொறுமை, போன் றபொருள்கள் திறம்படக் குறிக்கப்பட்டுள்ளன. இந்நாடகத்தைச் செவ்விய முறையில் அமைத்துள்ளார் ஆசிரியர்.


                                         விக்ரமோர்வசியம் 

                    விக்ரமோர்வசியம், கவிஞர் தீட்டிய மற்றொரு நாடக மாகும். இருக்கு வேதத்திலும், சதபதப்ராஹ்மணத்திலும் இக்கதையைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. புரூரவன் என்பான் ஓர் ஆரிய அரசன் ; ஊர்வசி என்பாள் ஓர் ஆடர மகள் (தேவலோகத்து நாடக மகள்). கொடிய அரக்கன் ஒரு வன் ஊர்வசியை வலியக் கைப்பற்றிய ஈர்த்துச் சொல்லுங் காலத்து, ஆண்டுத் தோன்றிய புரூரவன், அவளை அவ்வரக் கன் கரங்களிலிருந்து மீட்டுப் பறந்தான் காத்த அக்காவ லனது கட்டழகைக் கண்ணுற்று, ஊர்வசி அவனைக்காதலித் தாள். சில நிபந்தனைகளுடன் மன்னனது மனைவியாயினாள், ஆனால், அவள் அவனை விட்டுப் பிரிய நேர்ந்தபொழுது, அவ்வரசன் ஆற்றொணாத் துயரினால் சித்தங்கலங்கிப் பித்தனாயினான். இங்ஙனம், தலைவியைப் பிரிந்த நிலையில் அம்மன்னன் வனத்திடையே அங்குமிங்கும் அலைந்து அல்லலுற்றான். காதற்பிணியாற் பீடிக்கப்பட்டுக் காவற் பணியை மறந்த மன்னனது நிலையைத் திறம்படக் காட்டு கிறார் கவிஞர் பெருமானார்.


                             " அபிக்ஞான சாகுந்தலம் "

           காளிதாஸரின் நாடகங்களுக்குள் அபிக்ஞான - சாகுந்தலம் தவச் சிறந்ததாகும். இது சார்பாக, சம்ஸ் க்ருதத்தில் பெருமையாகப் பேசப்படும் உரை ஒன்றுண்டு.


               काव्येषु नाटकं रम्यं तत्रापि च शकुन्तला ।

               तत्रापि च चतुर्थोङ्कस्तत्र श्लोकचतुष्टयम् ॥

           “காவ்யங்களுக்குள் களிப்பைத் தருவது நாடகம் : நாடகங்களுக்குள் நனிசிறந்தது சாகுந்தலம் அச் சாகுந்தலத்திடையே, மட்டில்லாத மமிழ்ச்சியைப் பயப்பது நான் காம் அங்கம் ; அங்கும், நான்கு செய்யுட்களோ உவகையின் உச்சிக்கே நம்மை உய்த்துச் செல்லும் பெற்றியன."


நாடகத்தின் கதைப்பொருள்

                  இந்நாடகம் ஏழு அங்கங்களைக் கொண்டது. முதலங் கத்தில், அத்தினாபுரத்து அரசனான துஷ்யந்தன், வேட்டை யாட வனத்தை நோக்கிப் புறப்படுகிறான். அக்கான கத்தே, கண்ணுவ முனிவருடைய ஆச்சிரமத்தில் சகுந்தலையைக் காண நேருகிறது. அவளுடைய தோழியர் வாயிலாக அவளுடைய பிறப்பு-வரலாற்றைச் செவியுற்ற துஷ்யந்தன் அவளைக் காதற் கண்ணுடன் காண்கின்றான்.

                   இரண்டாம் அங்கத்தில், ஆச்சிரம-வாசிகள், வேந்தனது பாதுகாப்பினை வேண்டி நிற்கின் றனர். வேந்தனும் அங்கேயே தங்க இசைகின்றான்.

                  மூன்றாம் அங்கம் அரசனுக்கும் சகுந்தலைக்கும் இடையே எழுந்த காதற்றொடர்பினைக் கூறுகிறது.

                   நான்காம் அங்கம் கருணா-ரசக் கடல், கண்ணுவ முனிவர் தமது தீர்த்த-யாத்திரையிலிருந்து திரும்பி வருகின்றார். அவர், வேந்தன் துஷ்யந்தனுக்கும் வனிதை சகுந்தலைக்கும் உள்ளத்து உதித்த காதல் உணர்ச்சியை யுணர்கின்றார். அவர் அவளை இகழவில்லை ; அகமகிழ்ந்து வாழ்த்துகிறார் ; அவளது அவலக்கவலையை நீக்கி அமைதி யை அளிக்கிறார் ; அவள் நெஞ்சத்து எழுந்த நாணத்தைக் களையப் பெரிதும் உதவுகிறார். சகுந்தலையை அவளது தலைவனது தலத்திற்கு அனுப்புவதற்கு வேண்டிய ஏற்பாடு கள் நிகழுங்காலத்தில், மெல்லியற் கொடிகளும் செடிகளும் வன் மரங்களும் வன் விலங்குகளும் இனப்பறவைகளும், முற்றத்துறந்த முனிவரது தெள்ளிய உள்ளமும் பெரிதும் ஏக்கமுற்றுக் கலங்குகின்றன. பிரிவாற்றாமையைப் புலப் படுத்தும் அரிய மெல்லுணர்ச்சிகளை உளங்கொளக் காட்டிய  காளிதாஸர் காலங்கடந்த பெரும்புகழைப் பெற்றார்.  இக்காட்சியைக் கண்ட கருங்கல் நெஞ்சமும் நெருப்பிட்ட  மெழுகாய் உருகாதிருக்க எங்ஙனம் இயலும்..

                     ஐந்தாம் அங்கத்தில் கண்ணுவ முனிவருடைய மாணவருடனும் கௌதமியுடனும் சகுந்தலை அத்தினாபுரியைச் சென்றடைகிறான் துருவாசருடைய சாபங்காரணமாக துஷ்யந்தன் சகுந்தலையையுணர முடியவில்லை. சகுந்தலையின் துன்பத்திற்கு எல்லையில்லை அத்தருணத்தில் அங்குத் தோன்றிய பேரொளியொன்று அவளை, மரீசி முனிவருடைய தூய உறைவிடத்திற்கு உய்த்துச் செல்கின்றது. அங்கு, அவள் தன் தாய் மேனகையுடன் காலத்தைக் கழிக்கிறாள்,

                    ஆறாம் அங்கத்தில், அரசன், தனது திருப்பெயர் பொறித்த கணையாழியை, மீனவன் ஒருவன் வழியாகப் பெறுகின்றான் இக்கணையாழி, துஷ்யந்த அரசனால் அவனது அன்பின் அறிகுறியாக அன்று ஆச்சிரமத்தில் சகுந்தலைக்கு அளித்ததாகும் அதனைக் கண்ட அளவில் சகுந்தலையைப் பற்றிய இன்பநிகழ்ச்சிகள் யாவும் நினைவிற்கு வந்தன. வரவே, துருவாச முனிவரின் சாபங் காரணமாக சகுந்தலையின் திறத்துத் தான் இழைத்த தீமைகளை எண்ணி எண்ணி நெஞ்சம் புண்ணாயினான். இத்தருணத்தில் துஷ்யந்தன், இந்தரனுக்கு உதவியாக தேவலோகஞ் செல்ல நேர்ந்தது.

               ஏழாம் அங்கத்தில், வெற்றிவீரனான துஷ்யந்தன், தேவருலகத்திலிருந்து தன் நாடு திரும்புகிறான். வரும் வழியில், மரீசீமுனிவரின் தூய இருக்கையைக் காண்கிறான். அங்கு தன் மகனான பரதன் த் தன் கண்களாற் கண்டு களிக்கிறான். அவ்வமயத்தில், முனிவரின் சாபத்தின் வஞ்சனையால் நெடுங்காலம் பிரிந்திருந்த, நெஞ்சிற்கு இனிய நல்லாள் சகுந்தலையை மறுபடியும் பெறுகிறான், நீண்ட காலத்துப் பிரிவின் பின்னர் மீண்டும் ஒன்றுசேர்ந்த காட்சி கவின் கெழு விண்ணுலகக் காட்சியாகும் இங்கு, மரீசி மகரிஷியின் மங்கலவாழ்த்துடன் நாடகம் இனிது முடிகிறது.

                     தமது ஸம்ஸ்க்ருத ஸாஹித்திய  வரலாற்றில்  (History of Sanskrit Literature) காளிதாஸரைப் பற்றி மிகச் சிறப்பாகச் சீர்தூக்கிப் பாராட்டியுள்ளளார் பலதேவ உபாத்தியாயர். அவர் பின்வருமாறு கூறுகிறார்.

                     " காளிதாஸருடைய நூல்கள் ஸம்ஸ்க்ருத மொழிக்குப் பேரணி செய்கின்றன. உள்ளத்திற்கு உவகையை ஊட்டும் இனிமை, தெள்ளத் தெளிந்த நடையின் ஒள்ளிய ஒழுக்கு, ஆய்ந்தாய்ந்து அமைக்கப்பட்ட சொற்களின் அழகு, அவற்றின் பொருட்செறிவு (அர்த்தரிஷ்டி), அவற்றை அணிகளின் வளமை, ஒரு மகாகாவ்யத்திற்கு இன்றியமை யாத ஏனைய பண்புகள் என்ற இவையாவுமே காளிதாஸ ருடைய நூல்களில், ஏற்ற இடம் பெற்றுத் தலைசிறந்த வகையிற் பொலிகின்றன.

                       காளிதாஸர், இந்தியப் பண்பாட்டை விளக்கும் கவிப் பிரதிநிதி இந்தியத் அவர் படைத்துள்ள தன் மையை பாத்திரங்கள் யாவும் எடுத்து இயம்பும் பெற்றியன எவருடைய கவிதைகளில், அன்றாட வாழ்க்கையிற் காணப் படும் சிக்கலான நுண்ணிய நிகழ்ச்சிகளைத் திண்ணிய வகையில் உணர்ந்துத் தீர்வு நல்குந்திறம், செவ்விய முறையிற் சாலவுங் காணப்படுகிறதோ, அவரே உலகம் போற்றும் உத்தமக் கவியாகும் வித்தகம் படைத்தவராவர். காளிதாஸரின் பெருமை இதன்கண்ணே அமைந்துளது. காளிதாஸருடைய காவ்யங்களில், இந்திய சமூகப் பண்பாட் டின் உண்மையான வடிவம் வெளிப்பட விளங்குகிறது அவருடைய நாடகங்களில்  அது பொலிவுடன் நடனம் புரிகின்றது.

                       கூறுவான் எடுத்துக் கொண்ட கதைப்பொருளின் சிறப்பும்,    அதனை உரைக்கப் பயன்படுத்தும் நடையின் திறமும் தம்முள் இணைந்து இலங்குவதிலே காளிதாஸரின் தனிப்பட்ட தன்மை விளங்குகிறது காளிதாஸர், சில சொற்களைக் கொண்டே, தாம் கூறக் கருதிய பெரும்பொருளைப் புலப்படுத்துகிறார்; ஆனால் ஏனைய புலவர்களோ பலதிறப்பட்ட சொற்களைக் கொண்டும் அத்துணை வெற்றியைப் பெற்றிடும் ஆற்றல் அற்றவராக வே காணப்படுகின்றனர். அவர் எதைத் தொடினும் அதனைச் சுடர்விட்டு இலங்கச் செய்கிறார்; அவர் தொட்டன வெல்லாம் மாற்றரியாத செழும்பகம் பொன்னாக ஏற்றம் பெற்று போற்றப்படுகின்றன. பொருந்தும் பொருள்களை உய்த்துணரும் கூர்மையுடையவர் கவிஞர் பெருமானார், எவ்வெவ் வணர்ச்சிகளை எவ்லெச் சொற்களைப் பயன் படுத்தினால் நிறமுற, திறம்படச் செவ்விய முறையில் புலப் படுத்தக்கூடும் என்பதனை நன்குணர்ந்திருக் தார் காளிதாஸர், அத்தகைய உணர்ச்சிகளை ஏற்ற இனிய சொற்களால் எடுத்துக்காட்டி, தங்கருத்துக்களைத் தெள்ளத் தெளியப் புலப்படுத்துகிறார்.

                      காளிதாஸருடைய நூல்களில், உள்ளத்தைப் பற்றிய பொருள்களுக்கே முதலிடம் அளிக்கப்பட்டுள்ளது. மாறு படும் மக்களின் உள்ளங்களின் கூறுபாடுகளை யுணர்வதில் காளிதாஸருக்குத் தனிப்பட்ட ஆற்றல் உண்டு , உணர்ந்த வாறே உறைக்கவும் திறமுண்டு. உலகப்பொருள்களை ஓர்ந்துணர்வதில் அவருக்கிகுந்த ஆற்றல் அகலமும் உடையதாகும் உணர்ச்சிகளின் நுண்ணிய உட்பொருளை நுகர்ந்து நோக்கும் பெற்றி அவர் மாட்டுத் தனிப்பட்ட முறையில் வாய்ந்திருந்தது. ஆருந்தவர்த்தனர் என்பாரும், ஜர்மன் கவியர் கேடே என்பாரும், காளிதாஸரு டைய கருத்துக்களின் வளமார்ந்த விழுப்பத்தை, ஒருவாக் காக, வானுறப் புகழ்ந்து துரைக்கின்றனர்.

                     காளிதாஸர், ஒரொப்பற்ற பெருமையைப் பெற்ற பெருங்கவிஞர் அவருடைய காவ்யங்களின் கடையின் வடிவத்தை அவரே வடித்துக் கொடுத்துள்ளார். இனிய முறையில், தம்முடைய அரும்பெருங் கருத்துக்கள் எளிய எழிலார்ந்த வழிகளிடையே உய்த்துச் செல்லுவதற்குக் காளிதாஸர் ஏற்ற அணிகளைத் தக்காங்கு பயன்படுத்தி யுள்ளார் மக்களிடையே பெரிதும் வழங்கிவரும், "ISRT கரிகாலா' ("உவமைகளுக்குக் காளிதாஸர் என்ற புகழுரை மிகவும் பொருத்தமுடையதே. உலகத் துள்ளும் இயற்கையிடையிலும் எளிதிற் கட்புலனாகாத நுண்ணிய பகுதிகளிலிருந்துத் தேர்ந்து எண்ணி எடுத்தவை காளிதாஸ ருடைய உவமைகள், அவை, எடுத்துக்கொண்ட பொருளைத் திறம்பட வுணர்த்தவும், காவ்யத்தின் காம்பீர்ய தோற்றத் தைப் புலப்படுத்தவும் போற்றல் பெற்றவையாகும். இவ்வுவ மைகள், உலகத்தின் அகத்திருந்தும் புறத்திருந்தும் திறம் படத் திரட்டப்பட்டவை ஆதலின் தனிப்பட்ட ஆற்றலும் எழிலும் பெரிதும் உடையவை.

                           உள்ளத்து நிகழும் உணர்ச்சிகளைத் திறம்பட எடுத்துரை  ப்பதிலும் காளிதாஸர் ஒப்பும் உயர்வும் இல்லாதவர். காதலர் களுடைய இன்பச் சேர்க்கையை விரித்துரைப்பதிலும் அவர்களுடைய துன்பப் பிரிவை விரிவாக விளக்குவதிலும் ஒத்த ஆற்றலுடையவர் காளிதாஸர், தன் தலைவனான மதனை (மன்மதனை) இழந்துழி, இரதியின் புலம்பல் (குமாரசம்பவம் நான்காம் சருக்கம்), என்றுமே திரும்பிவராத வகையில் உயிர்நீத்துச் சென்றிட்ட இந்துமதியைக் குறித்து வெந்துய ரால் வருந்திய அஜன் புலம்பல் ; (ரகுவம்சம்-எட்டாஞ் சருக்கம்), என்ற இவ்விரண்டும் கருணாசத்தை பூர்ண மாகப் புலப்படுத்துகின்றன. தன் காதற்-கிழத்தியைப் பிரிந்த யக்ஷனொருவன் விரக வேதனையால் துன்புற்றுத் தன் தலைவின்பால் மேகத்தை தூதுவிடுத்தல், காளிதாஸரின் தனிப்பட்ட கற்பனைத் திறத்திற்கு ஓரெடுத்துக்காட்டாகும். தலைவனைப் பிரிந்து வாடும் பக்ஷன் மனைவியின் நிலையைக் கூறும் பகுதி " இரக்கவுணர்ச்சி”யை எழுப்புகின் றது இதனைப் படிப்போருடைய உள்ளங்கள் கருணையாலும் துன்பத்தாலும் நிறைந்தவை யாகின்றன.


         காளிதாஸரின் சந்தேசம்

               தெய்வங்களிடத்திலும் பிராஹ்மணர்களிடத்திலும் பரம பக்தி, தப்பாமற் பலிக்கும் குருவின வாக்யத்தில் அசைக்க முடியாத முழுநம்பிக்கை, தாயனத் தகும் பசுவிற்குச் செய்யும் பணி, விருந்தினரின் விருப்பத்திற்கு இணங்கத் தன் செல்வம் அனைத்தும் நல்கும் வேந்தனின் கொடைத்திறம் மக்களின் மனத்திற்கு மகிழ்ச்சியைப் பயப்பதற்காக பேரன்புவாய்ந்த மகனைவியையுந் துறக்கத் துணியும் பண்பு, என் றவை போன்ற தன்மைகளெல்லாம் காளிதாஸரின் (கதா) பாத்திரங்களைப் பொலிவுறச் செய்கின்றன. தாஸர் காலத்திய ஜன சமூகம் (சமாஜம்) சுருதி, ஸ்மிருதி களின் தூய நெறியில் அமைக்கப்பட்டதாகும் காளி மன்னன் பொருளை ஈட்டுவதெல்லாம் வறியார்க்கு வழங்குவதன் பொருட்டே , மறந்தும் தன் சொல்லின்கண் சோர்வும் பொய்யும் வாராமற் காப்பதற்காகவே அளவறிந்து சொற் களைப் பயன் படுத்துகிறான் வேந்தன் ; மன்னு புகழை யுன்னி மன்னன் போரிற் புகுகின்றானே யன்றி, வென்றியின் பொருட்டு அன்று; மனை மாட்சிக்கு நன்கலமாகிய மக்களைப் பெறுவதற்கே இல்லறத்தை அரசன் மேற்கொள்கின்றானே அல்லா து, நொடிப்பொ ழுதில் மடியுந் தன்மைத்தாய சிற்றின்பத்தின் நுகர்ச்சிக்காத அல்ல. அறத்தொடு மாறு படாத திறத்தை உடைய விருப்பங்களையே அரசன் போற்று கிறான். அறத்தொடு தொடர்பில்லாத செயல்களெல்லாம் அறவே களையற்பாலன காளிதாஸர் நம்பொருட்டு விடுத்துள்ள அரும்பெருஞ் செய்தி தகரத்தை ('த' 22 என்னும் எழுத்தை) முதலிற் கொண்ட மூன்று மொழிகளே யாகும் ; அவை த்யாகம்'', “ தவம் தபோவனம் 22 39 என்பனவாகும். ("வேண்டின் உண் டாகத் துறக்க, துறந்த பின்-ஈண்டியற் பால பல", "வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டில்லை - யாண்டும் அஃதொப்பதில்'', "தவஞ் செய்வார் தங்கமருஞ் செய்வார்மற் றல்லார்—அவஞ்செய் வார் ஆசையுட் பட்டு”, என்ற திருக்குறள் இங்கு கருதல் பாலன.)

                     தபோவனத்திடையே பிறந்து வளர்ந்து வளம் பெற்ற பண்பாடே மன்பதைக்கு (மக்கட்கு) மகிழ்ச்சியை நல்க வல்லது தூயதன்மைத்தாய தியாகத்தினாலேதான் மாயத் தன்மையுடைய தன்னலத்தைப் போக்க முடியும் உலகத்தில் உண்மையான உவகை-வாழ்க்கை ஓங்க வேண்டுமாயின் அது தவத்தின் திறத்தாலேதான் இயலும் (“வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம் - ஈண்டு முயலப்படும்”-திருக்குறள்) இமைப்பொழுதிற் பொன்னும் இம்மக்கள் உலகத்திற் பிறந்தபின்னர், என்றும் பொன்றாப் பெருவாழ்வைப் பெற உன்னுவார்க்கு, உலகப்பொருள் களிடையே உழன்று பொறி-புலங்கட்கு அடிமைப்பட்டுக் கிடத்தல் கூடாது ; வேண்டுதல் வேண்டாமை இல்லாத இறைவனிடத்து எல்லையில்லாத பக்தியினாலும், வேண்டிய 160 வற்றை வேண்டியபடி விளைவிக்கும் யோக சக்தியினாலும் தன் னை”யுணர்ந்து CGI பிறப்பொன்றும் பேதைமையை ஒழித்து, சிறப்பென்னும் செம்பொருளைக் காணவேண்டும். தன்னையறியத் தனக்கொரு தீங்கில்லை தன்னையறியாமல் னே கெடுகின்றான்- தன்னை அறியும் அறிவை அறிந்த பின்-தன்னையே யர்ச்சிக்கத் தானிருந்தானே” என்ற  திருமந்திரப் பாசுரப் பகுதியைப் பார்க்க, காளிதாஸரின் படைப்புக்கள் (காவ்யங்கள்) நுண்ணிய அருங்கலைக் கண் கொண்டு காணுங் காலத்து மட்டும் களிப்பினையளிக்குங் காட்சியன அல்ல ; பின்னர், தன்னையும் தலைவனையும் ஓர்ந்து உணரும் உள்ளத்தோடு நோக்கினாலும் பெரும் பயனைப் பயனப்பன ஆகின்றன. இதற்குக் காரணம் யாது காளிதாஸர், இந்தியக் கலையின் தலைசிறந்த மேம்பாட்டைப் போற்றும் புலவர் மட்டும் அல்லர் : இந்தியப் பண்பாட்டிற்கு விளக்கந்தரும் விழுத்தகையாகும் ஆவர் என்க.


                            *****************************


No comments:

Post a Comment

Sanskrit Names of Medicinal Plants (herbs)

      Sanskrit Names of  Medicinal Plants (herbs) English Name         Sanskrit Name 1. Aconite     Vatsanaabha 2. Adlay / Jobs tears       ...