Sunday, January 24, 2021

கவிசிரேஷ்டர் தண்டி / Daṇḍin



                            கவிசிரேஷ்டர் தண்டி

             பெருங்கவிஞராகிய “தண்டி” என்பவர் தென்னாட்டில் தோன்றியவர் - இந்றைய காஞ்சிபுரமே அவரது பிறப்பிடம் காஞ்சியிற் செங்கோல் செலுத்திய பல்லவமன்னர்களுடைய பாதுகாப்பில், கவிஞர் பெருமான் தம் காலத்தைக் களிப் புடன் கழித்து வரலானார். பல்லவ வேந்தனுடைய அருமைத் திருக்குமரனுக்குக் கற்பிக்க வேண்டி, கவிஞர் தண்டி, தமது காவ்யாதர்சம் " (எதுவான்'') என்னும் நூலை இயற்றினார் பின் வரும் பிரகேலிகையில் (பிதிர்ச் செய்யுளில், கவிஞர் பல்லவ மன்னர்களைச் சுட்டுகிறார்:


          " नासिक्यमध्या परितश्चतुर्वर्ण- विभूषिता । 

            अस्ति काचित्पुरी यस्यामध्टवर्णाह्वया नृपाः ॥

           எனவே, வரலாற்று (சரித்திர)ச் சான்றினாலும், பொது மக்கள் கூற்றினாலும், காஞ்சியிற்செங்கோலோச்சிய பல்லவ வேந்தர்களின் காப்பில் திகழ்ந்தார் தண்டியாசிரியர் என்ற செய்தி திறம்பட நாட்டப்படுகிறது

            மாபெருங் கவிஞர் பாரவியாருக்கு மூன்று குமாரர்கள் இருந்தனர். அவருள் " மநோரதர் என்பவர் இரண்டாம் பிள்ளை, மனோரதருக்கு மக்கள் நால்வர்; அக்நால்வருள்ளும் இறுதியிற் பிறந்தவர் வீரதத்தர் அவ் வீரதத்தர் கல்வி கேள்வி களிற் சிறந்த புலமையுடையவர், தத்துவ ஞான நூலில் நுண்ணிய பயிற்சியுடையவர். இவ் வீரதத்தரே தண்டியாரின் தந்தையார் நாமம் "கௌரி'' என்பது. தண்டியாரின் தாயின் திரு

           தண்டியார் தவச்சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே அவருடைய பெற்றோர்கள் வானுலகம் உற்றனர். ஏற்றபடி போற்றுவார் இல்லாமல், கனிவுடன் புரப்பார் அற்று, காஞ்சியிற் காலங்கழித்து வந்தார். நாட்டில் தோன்றிய குழப்பங் காரணமாக, காட்டிடையே இவர் அங்குமிங்கும் அலைந்து அல்லலுற்றார். நாட்டில் அமைதி நாட்டப்பட்ட பின்னர், பல்லவர்களுடைய சபையைச் சார்ந்து, ஆண்டே வாழத் தொடங்கினார்

          ஒன்பதாம் நூற்றாண்டில் எழுந்த இலக்கிய நூல்களில் தண்டியாரின் பெயர் சிறப்புறச் சுட்டப் படுவதிலிருந்து, இவரது காலம் அந்நூற்குண்டிற்குப் பிற்பட்டதாக இருத்தல் கூடாதென்பது இனிது விளங்கும் காவ்யாதர்த்திற் கண்டபடி ராஜவர்மாவை, (ராதவார்மாவை), இரண்டாம் நரஸிம்மவர்மன் (இவனுக்குப் பட்டப்பெயராகவோ, உபநாமம் எனப்படும் செல்லப்பெயராகவோ ராஜவர்மன் என் ற பெயர் வழங்கி வந்திருக்கலாம்) எனக் கொண்டோமானால் இதில் எவ்வித இடர்ப்பாடும் முரண்பாடும் இருப்பதற்கு இடமில்லை பேராசிரியர் ஆர். நரசிம்மாச்சாரியாரும், டாக்டர் பெல்வல்கரும், இவ்விரு பெயர்களும் ஒருவனையே குறிக்கவேண்டும், குறிக்கின்றன, எனக்கொண்டு, தண்டியாசிரியரின் காலம் ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியாதல் வேண்டும் என் செவத்திற்குப் னுடைய அறுதியிட்டு உறுதியாகக் கூறியுள்ளனர். சை புத்துயிரளித்த பல்லவ அரசனான நரசிம்மவர்ம காலம், 690-715 (கி.பி.) என்பதாகும். அவைப் புலவராகிய தண்டியின் காலம் எனவே, அரச கி.பி ஏழாம் நூற்றாண்டின் இறுதி, எட்டாம் நூற்றாண்டின் தொடக்கம் எனக் ஆகும். கொள்ளுதல் தகவுடையதே பொருத்தமானதே.

         அவருடைய நூல்களிற் சிறந்தவை, 

      (1) காவ்யாதர்ஷம் (  काव्यादर्श    )

      (2) தசகுமார சரிதம் ('दश कुमार चरितम्'') 

      (3) சந்தோ விச்சிதி (छन्दो विचिति) என்பனவாகும்.

        இம் மூன்றுள்ளும், “ தசகுமார சரிதம் " பெரும் புகழ் வாய்ந்ததும் நன்கு அமையப் பெற்றதும் ஆகும். ஸம்ஸ்க்ருத ஸாஹித்தியத்திலுள்ள மூன்று உரைநடை நூல்களில், தலைசிறந்த தன்னிலையைத் தாங்குகிறது. தசகுமாரசரி தம்” அதற்குக் காரணம், அதன் கண், கிளர்தரும் ஆர்வத்   தை நல்கிக் களிப்பினை யூட்டும் பல்வகைக் கதைகளும், பெருவியப்பை விளைக்கும் நிகழ்ச்சிகளும் நிறைந்துள்ளன என்பதே. இதன் பெயரே தெரிவிக்குமாறு, இது, பத்து அரசிளங் குமாரர்களைப் பற்றிய கதைகளைக் கூறுகிறது.

       இந்நூலகத்துக் காணப்படும் பொருள், நிகழ்ச்சிகளை (அல்லது சம்பவங்களை)ப் பெருமாள் லுங் கொண்ட கதையா கும். இந்நூலில், சிற்சில சமயங்களில் வியப்பு-விநோதங் களையும், சிற்சில சமயங்களில் வியாகூல-விசாதங்களையும் மக்கள் மனங்களிற் பெரிதும் எழுப்பவல்ல கதைகள் பரபரப்பையும் மகிழ்ச்சியையும் பயக்கும் வகையில், கூறப்பட்டுள்ளன .

              பாட்னா (புஷ்பபுரி) அரசனான ராஜஹம்சன் என்பான் மாளவ மன்னனான மானஸாரனை வெல்கின்றான். எனினும், தன் தவ வலிமையால், இழந்த ஆற்றலைத் திரும்பப் பெற் டையெடுத்துப் பகைவனான ராஜ றுப் பாடலீபுரத்தின் மீது படை ஹம்சனைத் தோற்கடிக்கிறான். போரில் தோல்வியுற்ற ராஜ ஹம்ஸனை, எடுத்துக்கொண்டு, தேரிற் பூட்டிய புரவிகள் (குதிரைகள் ) வெருவரும் விந்தியக் காடுகளிற் புகுந்தன இக்காட்டில், ராஜவாஹனன் பிறக்கிறான் ; அவ்வாறே ஏனைய அமைச்சர்களுக்கும் அருங்குமரர் கள் பிறக்கிறார்கள். அவர்கள் காளைப்பருவத்தை யடைந்த காலத்தில், பல நாடுக ளுக்குப் புறப்பட்டுப் போகிறார்கள். " துன்பங் தொடாந்து வரும் '' என்பதற்கு இணங்க, காலத்தின் கோலமாக, அவர்கள் பலவித துன்பத்திற்கு உள்ளாகிறார்கள்; பல இன் னல்களை எய்துகிறார்கள் இடையூறுகளும், கேடுகளும் நிறைந்தன வாக வாழ்நாளைப் போக்குகிறார்கள். இறுதியில் அவர்கள் ராஜவாஹனனைக் குறுகி, தத்தம் அநுபவக் கதை களைக் கூறுகிறார்கள் - நிரலே நிகழ்ந்த இச்செய்திகளை யெல் லாம், கேட்போர் யாவரும் வேட்புறும் வகையில், திறம்பட இணைத்த கதைத் தொடரே “தசகுமார சரிதம் எனப்படும் மயிர்க் கூச்செறியும் நிலைகள், நடுக்கத்தை நல்கும் நிகழ்ச் சிகள், திடுக்கிடச் செய்யும் சம்பவங்கள் என்பனவற்றால் நிறைந்துள்ள " தசகுமார சரிதத்தின்” சூழ்நிலை, அண்மைக் காலத்தில் எனக் கருதப்படும். வஞ்சனையும் புனை சுருட்டும் சண்டை சச்சரவுகளும், பொய்யும் மெய்யும் விரவத் தொடுக் கப்பட்ட தசகுமார சரிதம்" அண்மைக் காலத்தில் ஆக்கப்பட்ட சுவைமிகுந்த நூலாகும், நேர்ந்த நிகழ்ச்சிகளை உள்ளபடி உரைப்பதின்கண் அமைந்துள்ளது, பெரும்புல வர் தண்டியின் அருந்திறமை. நிகழ்ந்த நிகழ்ச்சிகளை நிகழ்ந்த வண்ணமே தீட்டியுள்ள உண்மை, அவருடைய நூலின் ஒவ்வொரு ஏட்டிலும் ,இதழிலும், பக்கத்திலும் இனிது காணப்படும்.

           அக்காலத்திய மக்களின் வாழ்க்கையை, ஊடுருவி சென்று உற்று நோக்கும் தங்கண்களைக் கொண்டு ஆம் ஆராய்ந்துள்ளார் ஆசிரியர் தண்டியார். அக்காலத்திய சமூகம், அற்றைய அந்தணர்கள் எத்துணைக்கரவொழுக்கம் உடையவராக இருந்தார்கள், தவக்கோலந்தாங்கிய மாக்கள் எத்துணைத் தருக்கும் செருக்கும் உடையவர்களாக இருப் தனர், பரத்தையரின் அருவரு நிலை, இருமனப்பெண்டிர் (வேசைகள் ) எங்ஙனம் மக்கள் - மன்னர்களின் உள்ளங் களைக் கொள்ளை கொண்டு அவர்களுடைய பொருள்களைக் கவர்ந்தனர் என்பது போன்றவற்றை உள்ளத்திற் பதியும் வகையில் நுட்பமாகச் சுட்டியுள்ளார் கவிஞர் மகளிர் மனத்தை உரைபோட்டு உணர்ந்துள்ளார் தண்டியார் ஓரிடத்தில், கொண்ட கணவனை பழித்து வஞ்சித்த கடு நெஞ்சம் படைத்த இழிதகைமை வாய்ந்த பெண் ஒருத்தியின் வெறுக்கத்தக்க காட்சியைக் காட்டுகிறார் ; மற்றோரிடத்தில் கண்டார் இகழ்வனவே காதலன் தான் செய்திடினும் கொண்டானையன்றி அறியாக் குலமகள்', மகளிர் மாணிக்கம், (கோமள - மெல்லிய - இருதயம்,) நன்னெஞ்சம் படைத்த நங்கை ஒருத்தியின் எழில் ஒவியத்தைத் தருகிறார். தூமினி (धूमिनि) யைப் போன்ற கன்னெஞ்சம் கொண்ட தூர்த்தை யை (கற்பில்லாத கொடியவளை)ப் படைத்ததின் பொருட்டு ஆராய்ச்சியாளர்-குழு என்றென்றும் தண்டி யாருக்குக் கடமைப்பட்டுள்ளது.

        அவர் காலத்தில் நிலவிய பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் முதலியவற்றை ஏற்றபெற்றி சுட்டிச் சொல்கிறார் கவிஞர், எடுத்துக்காட்டாக, கிராமங்களில் நடைபெற்ற கோழிச் சண்டை, நரை இனத்தைச் சேர்ந்த வெண்ணிறச்சேவல், தென்னை இனத்தைச் சேர்ந்த கருநிறச் சேவல் ; வெற்றிலை மெல்லுவதில் தனிப்பட்ட முறை; கர்ப்பூர நறுமணங் கொண்ட வெற்றிலையை அளித்துக் களிப்புடன் வரவேற்கப்பட்டனர் புதிய விருந்தினர் இக்காலத்தைப் போலவே, அக்காலத்திலும் புலித்தோலும் நீரைக்கொண்ட தோற்பைகளும் ஏராளமாக விற்கப்பட்டன ; மக்களின் மன மகிழ்ச்சியின் பொருட்டு (காமன் பண்டிகை ஹோலி “" ஆகிய) வசந்தோத்ஸவம் (இளவேனில் திருவிழா) கொண் டாடப்பட்டது; கிணற்றிலிருந்து நீரை இறைப்பதற்கு ஒரு வித மூங்கிற் குழாய் பயன்படுத்தப்பட்டது. இங்ஙனமாக, தண்டியாரை, மக்களின் கவிஞரெனக் கொள்ள வேண்டும். மக்கள் வாழ்க்கையி காணப்படும் நுண்ணிய -பருமையான, எளிய-ஏற்றமான, சாதாரண-சிறப்பான, எல்லாப் பொருள் களையும் இனிய சொற்களால் மெல்லென ஒழுகும் நடை கொண்டு விளக்கியுள்ளார் தண்டியார்

             தசகுமார சரிதத்தில்” கவிஞரின் சொல்லமைப்பும் நடையும் மிகவும் செவ்லியன. அவரது உரை நடை சுவை யானது, விளக்கமானது, ஒய்யென ஒழுகும் விழுமியது அது, சிலேடைகள் செறிந்தது அன்று, எளிதிற் பொருள் புலப்படாத சமாஸங்களைக் கொண்டது அன்று அதற்கு மாறாக, அவருடைய நூல் பலதிறப்பட்ட தொழில்களைச் சுட்டும் வகையில், மக்களின் அன்றாட வாழ்க்கையை உள்ளபடியே உணர்த்தி உவகை ஊட்டுவதாக உள்ளது.

            எழில் உடைமை (விரும்பும் பண்புடைமை) என்பது, தண்டி யார் நூலின் தனிச் சிறப்புத் தன்மை. அவருடைய பாஷை மிகவும் எளியது, அது அநாவசியமான அணி அலங்கரிப் புக்களைக் கொண்டது அன்று ; இனிய ஒழுக்கினை யுடையது. விளக்கந் தருவது; வேண்டிய விரும்பத்தக்க மரபுச் சொற்களையும் சொல்லாற்றலையும் பெற்றது சமஸ்க்ருத உரை நடை (கத்ய) ஸாஹித்தியத்தில் தண்டியார் தமக்கெனத் தனிப்பட்ட வழியை வகுத்துள்ளார்; அவருக்கென்ற தனிச் சிறப்புண்டு. இவர், சுபந்து (सुबन्धु) பாணபட்டர் என்றவர்களுடைய நடையின் போக்கைப் பின்பற்றவில்லை. தெளிந்த பொருளுடைமை, அரிய சுவைகளையும் எழில்களையும் எளிதிற் புலப்படுத்தல், இனிய சொல்லாட்சி, அன்றாட வாழ்க் கையிற் பயன்படும், பொதுமக்கள் பேசும் பாஷை, என்ற தனிப் பண்புகளையுடைய ஒரு நடையைப் படைத்துள்ளார் दण्डिन: पदलालित्यम्''-"சொற்சுவைக்கு (மொழிகளின் எழிலுடைமைக்கு)த் தண்டி-இன்றைக்கும் இக்கூற்று இனிமையுடையதே, பொருந்துவதே கல்வியாளருக்குக் களிப்பை நல்குதே. இதன்கண் மிகுத்துக்கூறும் புகழுரை யொன்றுமில்லை. இவருடைய வாக்கியங்கள் நீண்டன வாக உளவேல், அவை தனி ஏற்றத்தையும் எழிலையும் பெற்றவை அவை சிறியனவாக அமைந்துள வேல், அவற்றுட் பொருட் செறிவும் பொலிவும் காணப்படுவது ஒருதலை (நிச்சயம்).

            தண்டியின் கதைகளில், அவற்றுள் ஆச்சர்யமானவிநோத நிகழ்ச்சிகள் நிறைந்துள்ளமையால், புதுமை- ஆச்சர்யம்' என்னுஞ் சுவையே மிகுந்துள்ளதாக இருக்கும். இவரது நாலைச் சற்று உற்றுநோக்கின், இக்கவிஞர் பல்கலைகள் கற்றுத் தேர்ந்தவர் என்பது இனிது புலப்படும். அங்ஙனம் அல்லரேல், இவர், தம் நூலில், அரசியலைப் பற்றிய நுட்பங் களை எவ்வாறு கட்புலனாக்க முடிந்திருக்கும்? “காதற்கலை யில் காணப்படும் எளிதில் புலப்படாத மறைபொருள்களுக்கு எவ்வாறு விளக்கம் தந்திருக்க இயலும் ? "திருட்டுக்கலை" (சோரக்-கலை)யில் அமைந்துள்ள அருமையான பொருள்களை எவ்வாறு வெளிப்படுத்தக் கூடும் இக்கவிஞர் பெருமான் மன்னர்களால் புரக்கப்பட்டபோதிலும் இவரது நூல், பொது (சாதாரண) மக்களுடைய மகிழ்ச்சி, இன்ப-துன்பங்கள், சுக- சோகங்கள், ஆடல் பாடல்கள், வேடிக்கை-விநோதங்கள், பழக்க வழக்கங்கள், எண்ணும் எண்ணங்கள், பண்ணும் பணிகள் (வேலைகள்) என்றவற்றால் நிறைந்துள்ளமையால், படிப்போருடைய உள்ளங்கள் உவகை மேலீட்டினால், இவர் திறத்துத்தம் நன்றியறியதலுடைமையைத் தெரிவித்துக் கொள்ளப் பொங்கி எழுகின்றன. "ஒரு கவிஞரின் உண்மை ஆற்றலைக் காணவேண்டின் அதனை அவரது உரை-நடை நூலிற்காண்க'' என்ற கூற்று மிகவும் பொருத்தமுடையதே. 

         गद्यं कवीनां निकषं वदन्ति। -கவிகளுடைய உ.ரை-கல் அவர்களுடைய உரை நூல் எனக் கூறுகிறார்கள். என்ற மொழி வழங்கிவருகிறது. இம் மொழியைக்கொண்டு ஆராயுங்கால், இத்துறையில் தண்டியார் முழுவெற்றியைப் பெற்றுள்ளார் என்பதும், மதிப்பிற்குரிய தனிப்பட்ட இடத்தில் அமர்ந் துள்ளார் என்பதும் தெளிவாக விளங்கும். ஸம்ஸ்க்ருத மொழியிற் புதைந்து கிடக்கும் இனிய சொற்களைப் பொது மக்கள் பயன்படுத்தும் வண்ணம் கவிஞர் பெருமான் பெரிதும் முயன் றுள்ளார். 

    எடுத்துக்காட்டாக :- उपहस्तिका  (உபஸ்திகா)   வெற்றிலை -பாக்கு-சுண்ணம் முதலியவற்றைக்கொண்ட சிறு(கைப்)பெட்டி (அடைப்பை) ; मलमल्लक: (மலமல்லக) கோவணம் (கௌபீனம்); किंशास (கிம்பாஸ) தவிடு, (உமி); कालशेय: (காலஷேய) மோர் ; मद्गु: (மத்கு) போர்க்கப்பல் : पंचवीर गोष्ठ: (பஞ்ச வீரகோஷ்டம்) பொதுமக்கள் சபை उद्गमनीय: (உத்கமனீய) வெளுத்துள்ள (துவைக்கப்பட்ட) ஒரு ஜோடி வேஷ்டி ; उदंजन, (உதஞ்சன) கிணற்றிலிருந்து நீரிறைக்க உதவும் வாளி (பக்கட் Bucket). இங்ஙனமாக, கவிவரராகிய தண்டியார் தமது உயர்ந்த இடத்தை (நிலையை) இலங்கச் செய்கிறார்.

         

                              ****************************






No comments:

Post a Comment

Sanskrit Names of Medicinal Plants (herbs)

      Sanskrit Names of  Medicinal Plants (herbs) English Name         Sanskrit Name 1. Aconite     Vatsanaabha 2. Adlay / Jobs tears       ...