Sunday, January 24, 2021

பாஸர் (भास:)

 

                                              பாஸர் (भास:)

          பாஸர், அவர் காலத்திற் பிறங்கிய நாடக ஆசிரியர் அவர் வாழ்ந்த காலம் காளிதாஸருடைய காலத்திற்கு வெகு முற்பட்டது, அதாவது கி. பி. முதல் நூற்றாண்டு எனக் கருதப்படுகிறது. வெகுகாலத்திற்கு முற்பட்டது ஆதலின் பாஸரின் காலத்தைப் பற்றிய கருத்து வேறுபாடு புலவர்களுக்குள் இருந்துவருகிறது.

             பாஸரின் நாடகங்களுடைய தனிப்பட்ட சிறப்பியல்பு என்ன வெனில், அவை, நாடக மேடைமீது நடிப்பதற்கு நன்கு அமைந்தவை என்பதாகும். அவற்றை நாடகமேடை யில் நடிப்பது மிகவும் சுலபம், அழகாகவும் இருக்கும் பாஸருடைய நாடகங்களிற் காணப்படும் பாத்திரங்களின் உரையாடல்கள், கட்டுப்பாடு ( அடக்கம்) உடையவை பீடுடையவை (கம்பீரமானவை). இயன்ற இடங்களில் எல்லாம், (கூடுமான வரையில்) ஆராய்ந்து அமைக்கப்பட்ட ஏற்ற சொற்களே திறத்துடன் பயன் படுத்தப்பட்டுள்ளன.


        பாஸர், பெருவெற்றியோடு, பல நாடகங்களை யாத்துள்ளார். பல கவிஞர்களும், கல்விமான்களும், தத்தம் நூல்களில், பாஸரின் நாடகங்களைப் பற்றி, மிக வணக்கத்தோடு, மரியாதையோடு குறிப்பிட்டுள்ளார்கள்.

           பாணபட்டர்  : தமது  "ஹர்ஷசரிதத்தில்” பின்வருமாறு கூறியுள்ளார் :- 

                    सूत्रधारकृतारम्भैर्नाटकैबहुभूमिकैः । 

                   सपताकैर्यशो लेभे भासो देवकुलैरिव ।।

           அதாவது, சூத்ரதாரரால் (நாடகத்தை நடத்துகின்றவர்) நடத்தும் கயிற்றை (பொறுப்பை)க் கையிற் கொண்ட வர்) தொடங்கப்பட்டு, பல நற்பாத்திரங்களை (நடிகர்களை)ப் பெற்றனவாய் (भूमिका - ஒரு நாடகத்தில் நடிப்பவர், நாடகபாத்திரம் --  अन्यरूपैर्यदन्यस्य प्रवेशः स तु भूमिका । ") தொடர்புடைய பல நிகழ்ச்சிகளைக் கொண்டனவாய் (पताका: - நாடகத்தில் வரும் நிகழ்ச்சி, தொடர்புடைய கதை) உள்ள தம்முடைய நாடகங்களினால், புண்ணியத் திருக் கோயில்களைப் போல, பாஸர் கண்ணியத்தை, பெரும்புகழைப் பெற்றுள்ளார்".

            பாஸருடைய நாடகங்களைப் பாராட்டிப் பேசுங்கால், ராஜசேகர் பின் வருமாறு பெருமையாக எடுத்துரைக்கின்றார் :-


                  भासनाटकचक्रेऽपिच्छेकैः क्षिप्ते परीक्षितुम् । 

                  स्वप्नवासवदत्तस्य दाहकोऽभून्न पावकः ॥

          (இதன் பொருள்) :- பாஸருடைய நாடகங்களின் பொருட்டு ' அக்நிப் பரீக்ஷை' செய்த காலத்திலும், நெருப்பு அவற்றை எரிக்க முடியவில்லை ; அதாவது, அவை நெருப் புத்தேர்விலும் வெற்றியைப் பெற்றன. [அக்நிப் பரீக்ஷை : குறை கூறுவதைத் தம் குணமாகக் கொண்ட ஆராய்ச்சியா ளரின் கடுமையான தேர்வு (சோதனை).



                                                         

           இவ்வண்ணமே, கவிக்கரசர் காளிதாஸரும், தமது மாளவிகாக்நிமித்ரம் '' என்னும் நாடகத் தொடக்க உரை யாடலில், சூத்ரதாரரின் வாய்மொழியாக, பாஸரைப் பின் வருமாறு சிறப்புற (பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். " प्रथितयशसां भाससौमिल्लककविपुत्रादीनां प्रबन्धान तिक्रम्य कथं बर्तमानस्य कवे कालिदासस्य कृतौ वहुमानः அதாவது நாற்றிசைகளிலும் நன்கு பரவியுள்ள நற்புகழைப் பெற்றுள்ள பாஸர், ஸௌமில்லர் கவிபுத்ரர் போன்றவர்களுடைய நூல்களை விடுத்து, இற்றைய கவிஞராகிய காளிதாஸருடைய நூலுக்கு (நாடகத்திற்கு) இத்துணைப் பெரும்புகழ் (ஏற்றம்) எங்ஙனம் பொருந்தும் (ஏற்கும்) ?"

              இக் குறிப்புக்களிலிருந்து, காளிதாளஸருடைய காலத் திற்கு முன்னரே, பாஸருடைய நாடகங்கள் மக்களாற் பெரிதும் போற்றப்பட்டன என்பதும், பாஸருடைய இசை (புகழ்) நான்கு திசைகளிலும் நன்கு பரவியிருந்தது என்பதும் இனிது போதரும். உண்மையை நோக்குமிடத்து, பாஸரு டைய காலத்திலிருந்துதான், ஸம்ஸ்க்ருத ஸாஹித்திய வரலாற்றில், நாடகங்கள் தோன்றின என்பது கொள்ளக் கிடக்கின்றது.


பாஸருடைய (பாலரால் இயற்றப்பட்டனவாகக் கூறப்படும் )


               நாடகங்கள்

          பாஸரால் இயற்றப்பட்ட நாடகங்கள் பதின்மூன்று என்ப. இதிலும், புலவர்களிடையே, பலதிறப்பட்ட கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எனினும், இப் பதின் மூன்று, நாடகங்களும் பாஸராற் செய்யப்பட்டனவே என்பது பலராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட திப்பிய கருத்து இவற்றுட் சில, ஓரங்கத்தோடே முடிவடைகின் றன ; எனவே ஓரங்க நாடகங்கள் (காரன் காக" எனப்படும். பாஸரின் நாடகங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.


          1. ப்ரதிமா நாடகம்        (प्रतिमा नाटकम् )      

         2. அபிஷேக நாடகம்    (अभिषेक नाटकम्)   

  

          இவ்விரண்டும் ராமகதையை ஆதாரமாகக் கொண்டவை.


       3. பஞ்ச ராத்ர                  (पंचरात्र )

       4. மத்யம வ்யாயோக    (मध्यम व्यायोग)

       5. தூத கடோத்கச            ( दूतधटोस्कच )

       6. கர்ணபார                       ( कर्णे भारः )

       7. தூத வாக்ய                    (दृत वाक्य )

       8. உரு பங்க                        ( उरु भंग)


         இவ்வாறும் மஹாபாரதக் கதைகளிலிருந்து தோன்றியவை.


       9. பால சரிதம்                   ( वालचरित)

           இது பாகவதத்தில் (ஹரிவம்சம்) காணப்படும் கதையை 

            வைத்துக்கொண்டு எழுதப்பட்டது.


       10. தரித்ர சாருதத்த        (दरिद्र चारुदत्त )

       11. அவி மாரக                   ( अविमारक)


          இவ்விரண்டும் பொதுமக்களிடையே வழங்கி வரும் 

          (நாடோடிக்) கதைகளைப் பின்பற்றியவை .


      12. பிரதிஜ்ஞாயௌ        ( प्रतिज्ञा यौगन्ध-रायणम् ) )

            கந்தராயணம்

      13. ஸ்வப்ந வாஸ வதத்த (स्वमवासवदत)


       இவ்விரண்டும் உதயண  கதைகளுக்குக்

        ( வத்ஸராஜ ,வாஸவதத்தக்கதைகள் )   

         கடமைப் பட்டுள்ளவை.

               இந்நாடகங்கள் பொதுமக்களால் பாஸ் நாடகச் சக்கரம்'' (வளையம், வட்டம், தொடர்ச்சி) என்ற பெயரால் உணரப்படுகின்றன. இவ்வெல்லா நாடகங்களிலும் "ஸ்வப்ந வாசவதத்த '> ("स्वप्नवासवदत्त'') என்னும் நாடகம் மக்களாற் பெரிதும் போற்றப்படுகிறது. அந்நாடகத்தின் கதையின் போக்கு (சுருக்கமான வடிவம்) பின் வருமாறு - 

        முன்னொரு காலத்தில், கௌஸாம்பியைத் ('कौशाम्बी)', தலை நகராகக் கொண்டு உதயணன் என்னும் ஓரரசன் செங்கோலோச்சி வந்தான். உஜ்ஜயினில் அரசு செய்த மஹா சேன மன்னன், அவனுக்குப் பகைவன். அம் மஹாசேனனை வெல்வதற்கு, உதயணன், மகத நாட்டு வேந்தனாகிய தர்ச கனுடைய தயவை நாடவேண்டியிருந்தது. உதயணனுக்கு யெளகந்தராயணன் என்னும் ஓர் அமைச்சன் இருந்தான், ஒரு சமயம், இழிந்த சூழ்ச்சிகளைக் கொண்டு, மஹாசேனன் உதயணனை ச் சிறைசெய்தான். இதனைப் பொறாதவனாய் யெளகந்தராயணன், மஹாசேனனைப் பழிவாங்க வஞ்சினங் கொள்கிறான். தர்சகனை ஏமாற்றும் பொருட்டு, வாசவதத்தை கொளுத்தப்பட்டுச் சாம்பலாக்கப்பட்டுவிட்டாள் என் ற பொய்க் கதையைப் பரப்பினான் யெகந்தராயணன். 

             ஆனால் உண்மையில், வாசவதத்தையை மாறு வேஷத்தில் , தர்சகனுடைய சகோதரியான பத்மாவதியிடம் ஒப்படைக்கிறான் மந்திரி யெளகந்தராயணன். இதன் பிறகு, வத்ஸராஜன் பத்மாவதியை முறைப்படி மணக்கிறான. தன்னுடைய கனவில் அரசன் வாசவதத்தையைக் காண்கிறான். அவளை நேரிற் வேண்டும் என்னும் பெருவிருப்பம் (வேணவா) அவன் உள் ளத்தில் தீவிரமாக எழுகிறது வாசவதத்தை உயிருடன் 6T காண இருக்கிறாள் என்ற நம்பிக்கை அவன் உள்ளத்தில் வேரூன்றித் தோன்றுகிறது. அது நாளடைவில் நனிவளர்கிறது. 

              வத்ஸனுடைய வெற்றிக்குப் பிறகு, வாசவதத்தை அர சன் திருமுன்பு கொணரப்படுகிறாள் ; இருவரிடையே மறுபடியும் இன்பச் சேர்க்கை ஏற்படுகிறது.'' 

             இந்த நாடகத்தைத் தவிர, பிரதிமா நாடகமும் ( प्रतिमा नाटकम् ) தரித்ர சாருதத்தன் (दरिद्रचारूदत्त)  என்னும் நாடகமும், பாஸருடைய நாடகங்களிற் சிறந்தனவும், மக்களாற் பெரிதும் விரும்பப் பட்டனவும் ஆகும்.






No comments:

Post a Comment

Sanskrit Names of Medicinal Plants (herbs)

      Sanskrit Names of  Medicinal Plants (herbs) English Name         Sanskrit Name 1. Aconite     Vatsanaabha 2. Adlay / Jobs tears       ...